பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


144 அகத்திணைக் கொள்கைகள் பரவாத களவை அம்பல் என்றும், களவை அலர் என்றும் கூறுவர் பேராசிரியர். ” அம்பல் என்பது முகிழ் முகிழ்தல் என்றும், அவர் என்பது சொல் நிகழ்தல் என்றும் உரைப்பார் நச்சினார்க் கினியர்.’’’ இறையனார் களவியலுரையாசிரியர், அம்பல் என்பது சொல் நிகழாதே முகிழ்முகிழ்த்துச் சொல்லுவதாயிற்று; இன்னதின் கண்ணது என்பது அறியலாகாது என்பது. அலர் என்பது, இன்னானோடு இன்னாளிடை இதுபோலும் பட்டதென விளங்கச் சொல்லி நிற்பது. அம்பல் என்பது பெரும்போதாய்ச் சிறிது சிறிதாக நிற்க அலரும் என நிற்பது, அலர் என்பது, அப் பெரும்போது தாதும் அல்லியும் வெளிப்பட மலர்ந்தாற்போல் நிற்கும் நிலைமையென வேற்றுமை சொல்லப்பட்டதாம்’ என்று மேலும் விளக்குவர்.’’’ அலரறிவுறுத்தலை, அறிந்தோர் 'அறனிலர் என்றலின் சிறந்த இன்னுயிர் கழியினும் நனிஇன் னாதே புன்னை கானல் புணர்குறி வாய்த்த பின்ஈர் ஒதிஎன் தோழிக்(கு) அன்னோ படுமணி யானைப் பசும்பூட் சோழர் கொடிதுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண், கள்ளுடைத் தடவின் புள் ஒலித்து ஒவாத் தேர்வழங்கு தெருவின் அன்ன, கெளவை ஆகின்றது.ஐயதின் அருளே’ (நனி - மிகவும்; பின் ஈர் ஒதி - பின்னிய குளிர்ந்த கூந்தல்; அன்னோ (இரக்கச்சொல்); மறுகின் - தெருவில், தடவு - சாடி, பானை, புள் - வண்டுகள், கெளவை - அலர், பழிச் சொல்i என்ற நற்றிணைப் பாடலால் அறியலாம். இது மணம் செய்து கொள்ளாது களவுப் புணர்ச்சியே கருதி வந்தொழுகும் தலை மகனைத் தோழி குறியிடத்தில் தொழுது தலைவனால் அருளிப் பாட்டோடு செய்த தலையளிதான் பலராலும் அறியப்பெற்று அலராயிற்று என்றும், இனி இவள் இறந்து பட்டொழியினும் இப் பழிச்சொல் நீங்குவதொன்றன்று என்றும் வரைவு தோன்றக் கூறு 129. திருக்கோவை. 180 இன் உரை. 130 களவியல் - 48 இன் உரை (நச்) 131. இறை, கள. 22 இன் உரை. 132. நற். 227