பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#53 அகத்திணைக்கொள்கைகள் நயம் தினைந்து இன்புறற் பாலது. கடுமா தாக்கி தலைவன் இறந்துபடின் தலைவியும் அவளன்றி இல்லாத தானும் தாயரும், தமரும் எல்லோரும் இறந்துபடுதல் ஒருதலை என்பதே அவள் சொல்ல அறியாத செய்தியாகும். இனி, நீ இவளை மணந்து நாளும் நல்லறம் நடத்தும் கருத்துடையை அல்லை; இவ்வாறு இரவிலோ பகலிலோ செவ்வி கிடைத்து மிக்ககளவின்பம் நுகர்தலே நினது குறிக்கோள்; அதனால்தான் ஏதம் மிக்க இத்தகைய இரவு வரவினை நாங்கள் உடன்படவில்லை. நீ வாய்மையாக இவளை விரும்பின் விரைந்து வரைந்து கொள்வதே நின் பொறுப்பு’’ என்று கூறி வரைவு கடாவுவாள். அவன் வஞ்சத்தை உள்ளுறையாகப் பொதிந்து வைத்து கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல் அடுக்கல் மஞ்ஞை கவரும் நாட! என விளித்தனள். இதன்கண் 'கொடிச்சி என்றது', இற்செறித்துக் காக்கும் தமரை ஏனற் பெருங்குரல் என்றது உயர்குடிப்பிறப்புடைய தலைவியை, அடுக் கத்து மஞ்ஞை என்றது, தலைவனை என்பதாக உணரப்படும். வரைவு கடாதல் துறையில் தலைவியின் இற்செறிப்பினைத் தோழி அறிவுறுத்தும் பாடல்கள் சங்க இலக்கியங்களில் அதிகமாகக் காணப்பெறுகின்றன. செறிப்பறிவுறுத்தி இரவும் பகலும் வாரல்’ என்று கூறும் அகப்பாட்டு இது. இயன்முரு கொப்பினை வயநாய்ப் பிற்படப் பகல்வரிற் கவ்வை அஞ்சுதும்; இகல்கொள இரும்பிடி கன்றொடு விரைஇ கயவாய்ப் பெருங்கை யானைக் கோள்பிழைத் திரீஇய அடுபுலி வழங்கும் ஆரிருள் நடுநாள் தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்; என்னா குவள்கொல் தானே பன்னாள் புணர்குறி செய்த புலர்குரல் ஏனல் கிளிகடி மிடலும் ஒளிந்தனள் அளியள் தானின் அளியல திலளே’** (இயல்முருகு - இயங்கும் முருகனை, வயநாய் - வலிய நாய்: கவ்வை - அலர் இரும்பிடி - கரிய பெண் யானை, விரை இய கூடிய, கயவாய் - அகன்ற வாய், கோள் - கொள்ளு தல்; இகல் - பகைமை, அடுபுலி - கொல்லும் புலி, குறி - பகற்குறி; புலர்குரல் - முற்றிய கதிர் அளியள் - இரங்கத் தக்காள்; அளி - அருள்) 146, அகம் - 118.