பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தோழியிற் கட்ட மரபுகள் 151. متن ویتامین ببینید இதில் பகல்வரிற் கவ்வை அஞ்சுதும்" என்றதனால் பகற்குறி விலக்கியும், ஆரிருள் நடுநாள் வருதல் அஞ்சுதும் என்றதனால் இரவுக்குறி விலக்கியும், ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள் என்றதனால் செறிப்பறிவுறுத்தியும், நின் அளி அலது இவள் என்றதனால் வரைந்து கொள்ளல் வேண்டியும் தோழி குறிப்பிடு தலைக் கண்டு மகிழலாம். இதே துறையில் தலைவியின் ஆற்றாமை கூறும் பாடல்களுg நிறையவுள்ளன. கலித்தொகைத் தோழி ஒருத்தி இங்ஙனம் கூறு வாள்: முலை முகம் தோன்றாத மிக்க இளமைப் பருவத்தே நீ எம் தலைவியுடன் கொண்ட உறவினைத் தொடர்ந்து நல்காது விடுகின்றாய். அவள் கண்கள் நீர் உகுப்பவும் உன் மனம் இரங்க வில்லை. அவள் மேனி சாய்த்து நின்னை வெறுத்து அழாநிற்கவும் நீ அவளைக் கைவிடுகின்றாய். நீ மிகக் கொடியை' என அவளது ஆற்றாமையை எடுத்துரைத்து, - "அனையளென்றளிமதி பெரும்! நின்னின் இறைவரை நில்லா வளையள் இவட்கினிப் பிறைசேர் சுடர்துதல் பசலை மறையச் செல்லு நீ மணந்தனை விடினே." |அனையள் - ೨, தன்மையுடையவள்: அளிமதி- அளிப்பாய்: மணந்தனை விடின் - மணந்து கொண்டால்) . என்று வரைவுகடாவுவதைக் காண்க. இதனை அடுத்த மூன்று பாடல்களும் இங்ஙனமே தலைவியின் ஆற்றாமை கூறி வரைவு கடாவுவனவாக அமைந்துள்ளன். நொதுமலர் வரைவு நேரும் என அறிந்த ஐங்குறுநூற்றுத் தோழி தலைவனிடம் இதனைக் கூறும் திறம் நனி நுட்பமானது, . சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தலொடு குறுங்கை இரும்புலி பொரூஉ நாட! நனிநாண் உடைமைய மன்ற . பணிபயந் தனநீ நயந்தோள் கண்ணே.* (ஒருத்தல் - விலங்கின் ஆண் குறுங்கை - முன் கால்களை: இரும்புலி - பெரிய புவி, பொரூஉ - போரிடும்.) இதில் என்னைப் பிறர் மணக்க விரும்பி எம் சுற்றத்தார்பால் மகட்பேசி வந்துள்ளார்' என்று பெரு நாணுடைய தலைவி

-

147. கவி - 125 148. ஐங்குறு - 266