பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


15? - அகத்திணைக் கொள்கைகள் கூறுதலும், அச் செய்தியைத் தோழி தலைவனுக்குக் கூறுதலும் நாண் அழிவாகும் ஆதலின், பிறர் வரைவு முயல்வதை நாங்கள் தினக்குணர்த்த வியலாதே மாகின்றோம் என்பாள், தனி நாணுடைமையம் மன்ற என்கின்றாள். நின்னால் நயத்து, பட்டோள் கண் நீர் உகுதற்குக் காரணம் யாதென நீயே ஆராய்ந்து கொள்ளக் கடவை எனக் காரியத்தை மட்டிலும் . கூறிக் காட்டுவாள் நீ நயந்தோள் கண் பனிப் பயந்தன என் கின்றாள். நாணுடைமையை வெளிப்படையாகக் கூறாது உள்ளுறையாகக் கூறுவாள், பன்றி ஒருத்தலொடு புலி போரிடற் கிடனாக நாடனே' என்கின்றாள். இதில் இப்பொழுது நினக்கு எவ்வாற்றானும் ஒவ்வாத ஏதிலார் தலைவியை மணத்தற்கு விரும்பி மணம் பேசி வந்துளார் ஆகலின் நீ விரைவில் அவரோடு மாறுபட்டுத் தலைவியை வரைந்து கொள்வதால் அவர்களை வினைகெட்டு முதுகிட்டுப் போம்படி செய்தல் வேண்டும்’ என்ற வேண்டுகோள் அடங்கியுள்ளதைக் கண்டு மகிழ்க. மேலும், தலைவியை மணம் பேசி வந்த ஏதிலார் எவ்வாற்றாலும் நினக்கு ஒவ்வாரேனும் தம் சிறுமையாலே நம் பெருமாட்டியைப் பெறு வதற்குப் பேராசையாய் வந்துள்ளனர் என்பாள், சிறுகண் பெருஞ் சினப் பன்றி ஒருத்தல்' என்கிறாள். இனி, நீ பெருந்தக வுடையை என்பாள் இரும்புலி’ என்கின்றாள். புவியேயாயினும் வினை செய்தற்கண் காலந்தாழ்த்தலையுடையை என்பாள் 'குறுங்கை’ என்கிறாள். இப்பாடலில் நீ விரைந்து வரைந்து கொள்க’ என்பது குறிப்பெச்சமாக அமைந்துள்ளது. நற்றிணைத் தோழி யொருத்தி தான் தலைவன் வரும் ஆற்றது அருமை அஞ்சித் தான் ஆற்றாளாய் உரைக்கும் பாடலில் இத்துறை அமைந்திருக்கும் அருமைப்பாடு அநுபவித்து மகிழத் தககது. ஆளில் பெண்டிர் தாளில் செய்த நுணங்குநுண் பனுவல் போலக் கணங்கொள ஆடுமழை தவழும் கோடுயர் நெடுவரை முடமுதிர்ப் பலவின் குடமருள் பெரும்பழங் கல்லுழு குறவர் காதல் மடமகள் கருவிரல் மந்திக்கு வருவிருந்து அயரும் வான் தோய் வெற்ப! சான்றோய் அல்லை.எம் காமம் கனிவது ஆயினும் யாமத்து இரும்புலி தொலைத்த பெருங்கை யானை