பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


$54 அகத்தினைக் கொள்கைகள் அன்டெனப் படுவது தன்கிளை செறாஅமை அறிவெனப்படுவது பேதையார் சொல்நோன்றல் செறிவெனப் படுவது கூறியது மறாஅமை நிறைவெனப் படுவது மறைபிற ரறியாமை முறையெனப் படுவது கண்ணோடாதுயிர்வெளவல் பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்" (ஆற்றுதல் இல்வாழ்க்கை நடத்துதல்:அலந்தார் மிடிந்தார்; போற்றுதல்-பாதுகாத்தல்; புணர்ந்தார்-கூடினார்; பாடு. உலக வொழுக்கம்; செறாமை-கெடாதிருத்தல்; பேதை யார்-அறியாதார்; நோன்றல்-பொறுத்தல்; செறிவு-உறவு: மறை பிறர் அறியாமை - மறையாக உள்ளதைப் பிறர் அறியாமல் ஒழுகுதல்; கண்ணோடாது-கண்ணோட்டம் செய்யாமல்; வெளவல்-கொள்ளுதல்,போற்றார்-பகைவர்; பொறுத்தல்-காலம் வரும் அளவும் பொறுத்தல்) இப்பாடற் பகுதி என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்ளும் உண்மைகளை உணர்த்துகின்றது. உணர்த்தியவள். "ஆங்கதை யறிந்தனி ராயின்என் தோழி நன்னுதல் நலனுண்டு துறத்தல் கொண்க! தீம்பால் உண்பவர் கொள்கலம் வரைதல் நின்றலை வருந்தியாள் துயரம் சென்றனை களைமோ பூண்கநின் தேரே' (துதல் - நெற்றி, கொண்கன் - நெய்தல்நிலத் தலைவன்; வரைதல்-கவிழ்த்து விடுதல்: நின்றலை-போல்வதொன்று: களைமோ, களைவாய் பூண்க-புரவியைப் பூண்பதாக). என்று வரைவுக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறுகின்றாள். இங்ஙனம் பல்வேறு முறையாகத் தோழி வரைவு கடாவும் நுட்பங்களை யெல்லாம் கூறும் பாடல்கள் மிகப் பலவாகும். வரைவு கடாவலில் தலைவனை இடித்துரைக்கும் வாய்ப்பினைப் பெறுகின்றாள் தோழி. ஐங்குறுநூற்றுத் தோழியொருததி இடித்துரைக்குங்கால் வரைவை மனங் கொள்ளாக் களவுடை நம்பியும் இனி வரைவினை முடிக்கத்தான் வேண்டும் எனக் காலம் அறிகின்றான். 150. ജ്-133 151. கவி.133