பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் - 157 என்பது அவர் கூறும் நூற்பா. இந்நூற்பாவில் மாறுகோள் இல்லா மொழி என்பதற்கு உரையாசிரியர், எற்றினொடு மாறு கொள்ளாமையே எனின், தாயறிவினொடு மாறு கொள்ளா மையும், தலைமகள் பெருமையொடு மாறு கொள்ளாமையும், தலைமகள் கற்பினொடு மாறு கொள்ளாமையும், தோழி தனது காவலொடு மாறு கொள்ளாமையும், நாணினொடு மாறு கொள்ளாமையும், உலகினொடு மாறுகொள்ளாமையும் எனக் கொள்க' ' .' என்று நயம்படக் கூறியிருப்பது பன்முறை படித்துப் படித்து இன்புறற்பாலது. தலைவிக்கு வாய்த்த களவொழுக்க நிகழ்ச்சியினால் தன்மீது குற்றம் ஏதும் இல்லை என்று இவ்வா றெல்லாம் தோழி கூறுவாள். மேற் கூறிய அனைத்திற்கும் குற்ற மில்லாத வகையாகத் தோழி ஆராய்ந்து கூறுவாள் என்பதை உரையாசிரியர் பெற வைத்தமை எண்ணி மகிழ்தற்குரியது. அறத்தொடு நிற்கும் முறையும் ஒருவித ஒழுங்கிலேயே நடை பெறும். தலைமகள் தோழிக்கும். தோழி செலவிவிக்கும் செவிலி நன்றாய்க்கும், நற்றாய் தந்தை தன்னையர்க்கும் தலைவியின் களவொழுக்கச் செய்தி வெளிப்படுத்தப்பெறும் என்று இலக்கண ஆசிரியர்கள் குறிப்பிடுவர். . தலைவி பாங்கிக் கறத்தொடு நிற்கும் பாங்கி செவிலிக் கறத்தொடு நிற்கும் செவிலி நற்றாய்க் கறத்தொடு நிற்கும் நற்றாய் தந்தை தன்னையர்க் கறத்தொடு நிற்கும் என்ப நெறிபுணர்த் தோரே. என்பது நாற்கவிராச நம்பியார் கூறும் விதி. களவொழுக்கத்தை யார் யார் யார் யாருக்கு வெளிப்படுத்தலாம் என்ற ஏணி வைத்தாற் போன்ற மன நிலைகளை யுடையது என்பது இதனால் தெளியப்படும். தோழியும் அறியாது மறைந்தொழுகிய தலைவி தன் களவினை அவளுக்குக் கூறி அறத்தொடு நிற்பாள். பின்னர்த் தோழி தன் தாயாகிய செவிலிக்கும், செவிலி தலைவியின் தாயாகிய நற்றாய்க்கும் களவைக் கூறுவர். இதுவே வயதுக்கும் உறவுக்கும் ஒத்த முறையாகும். நற்றாயோ தலைவியின் தத் தைக்கும் உடன் பிறந்தோருக்கும் சொல்லாற் கூறாது அவர்கள் அறிந்து கொள்ளுமாறு குறிப்பால் தெரிவிப்பாள். - 156. டிெ நூற். 14 இன் உரை. 157. நம்பிஅகப்-48