பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் 159 முடிக்க முயல்வாள். களவுச் சுவடு தெரியாமல் பல தீமைகள் முளைப்பதற்கு முன்னரே தலைவன் வரைந்து கொள்ள வேண்டும் 8 ماهير يث | -امام سهم متداگ سیبیاسر مه ، گ .. 哆 * என்பது தோழியின் நோக்கம். அகநானூற்றுத் தோழியிடம் இந்த ஆசையைக் கானலாம். வரையின் எவனோ வான்தோய் வெற்ப கணக்கலை இகுக்கும் கறியிவர் சிலம்பின் மனப்பறாங் காமம் புணர்ந்தமை யறியார் தொன்றியல் மரபின் மன்றல் அயரப் பெண்கோள் ஒழுக்கம் கண்கொள நோக்கி நொதுமல் விருந்தின் போலஇவள் புதுநாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே.”* |வரையின்-மணந்து கொண்ட்ால், எவனோ-என்னை; கனம்-கூட்டம்; கலை-மான்கள்: இகுக்கும்-ஒலிக்கும்; கறி. மிளகுக் கொடி, சிலம்பு-மலைச் சாரல், மணப்பு அரும். எய்துதற்கு அரிய, மன்றல்-மணம்; அயர-நிகழ்த்திட: வெற்பனே, மான்கூட்டமும் மிள்குக் கொடியும் படரும் மலைப் பகுதியில் நீ நிகழ்த்திய களவொழுக்கத்தை எம் உறவினர் அறி யாரன்றே: அவர் அறியாத நிலையில், மரபு மணம் செய்து கொள்க. கொள்வையாயின், நின்னை முன்பின் அறியாதார் போல் நடந்து கொள்வோம். இவளும் முதன்முதல் நின்னைக் காண்பவள்போல் நாணம் அடைவாள். அவள் பொய்யாக நாணி நிற்பதைக் கண்டு நாங்கள் மகிழ்வோம்' என்று தன் ஆசையைச் சொல்லுவது போல் அறிவு கொளுத்துவதையும் கண்டு மகிழ்க, அடுத்து தலைவி முதலியோர் களவினை வெளிப்படுத்தும் திறங் கனைக் காண்டோம். தலைவி பாங்கி குக் வெளிப்படுத்தும் திறம்; களவொழுகும் தலைவியின் வறுபாடு கண்ட தோழி, எம்பெருமாட்டி நினக் இவ்வேறுபாடு எற்றினானாயிற்று? என்று வினவ, அதற்கு அவள் "இஃது எனக்குப் பட்டது இன்னவிடத்து ஒரு ஞான்று நீயும் ஆயங்களும் தழையும் கண்ணியும் கோடற்கு எண்ணிச் சிறிது நீங்கி னாய் யான் நின்று ஒரு மணிச்சுனை கண்டேன்; கண்ட அம்மணிச் சுனைதான் ஆம்பலேகுவளையேநெய்தலே தாமரையே என்றிப்பூக் களால் மயங்கி மேதக்கது கண்டு, வேட்கையான் ஆடுவான் இழிந் 161. அகம்-13.