பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


160 அகத்திணைக் கொள்கைகள் தேன்; இழுக்கிக் குட்டம் புககேன்; புக்குத் தோழியோ , என, தி கேளாயாயினாய் ஆக, ஒரு தோன்றல் வந்து தோன்றி எனது துயர் நீங்குதற்காகத் தன் கை நீட்டினான் நீட்ட, யானும் மலக் கத்தான் நின் கை எனப் பற்றினேன்; பற்ற வாங்கிக் கரைடு, நிறிஇ நீங்கினான்; நீ அன்று கவலுதி எனச் சொல்லேன் ஆயி னேன்; நீ எவ்வெல்லைக் கண்ணுங் கைவிடாதாய் அஞ்ஞாறு தை விடலினையாக்கிற்று விதியாகாதே; இனிப் பிறிதொன்றாவது கொல்லோ எனக் கலங்கி வேறு பட்டேன்' என்று தோழிக்குத் தலைமகன் அறத்தொடு நிற்கும். " புனலின்கண் தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்டமையின் இதனைப் புனல் தரு புணர்ச்சி’ என்று அகம் பொருள் நூல்கள் கூறா நிற்கும். இங்ஙனமே, பூத்தருகின்ற ஏதுவால் முதன்முதல் அவர் தமக்குள் எதிர்ப்பாடு நேருமாயின் அதனைப் பூத்தரு புணர்ச்சி என்றும், தலைமகள் மேற் சினந்தேறி வந்த களிற்றினைக் கொன்று நீக்கி அவளை அவ்விடுக்கணினின்று பாதுகாக்கும் ஏதுவால் முதன்முதல் அவர் தமக்குட் கூட்டம் நிகழ்வதாயின், அதனைக் களிறுதரு புணர்ச்சி: என்றும் ஆசிரியன்மார் கூறுவர். இன்னும் பிறபல ஏதுக் களால் அம்முதற் புணர்ச்சி நிகழுமாயின், அவையெல்லாம் அவ்வவ் வேதுக்களால் நிகழும் புணர்ச்சிகள் என்று கூறப்படும். இவற் றையும், இவற்நிற் கெல்லாம் ஏதீடு என்றும் பெயருண்மை யையும் தொல்காப்பியப் பொருளியலுரையுள்' ஆசிரியர் நச்சினார்க்கினியர் தெளிவு படுத்துவர். இனி புனல் தரு புணர்ச்சி மாறுகோள் இல்லா மொழி: யாமாற்றை விளக்குவோம். தாயின் விருப்பத்திற் கிணங்கவே தோழியும் தலைவியும் பொழிற்கண் சென்று விளையாடச் சென்றாராதலின், அப் புனல்தரு புணர்ச்சி நிகழ்ச்சி தாயறிவி னொடு மாறு கொள்ளாதாயிற்று. புக்குத் தோழியோ!' என்ற மையால் தலைமகள் பெருமையொடு மாறுகொள்ளாதாயிற்று. 'நீட்டின விடத்து மலக்கத்தான் நின் கையெனப் பற்றினேன் என்றமையால், தலைமகள் கற்பினொடு மாறு கொள்ளா தாயிற்று. நீ எவ்வெல்லைக் கண்ணுங் கை விடாதாய் அஞ் ஞான்று, கை விடலினையாக்கிற்று விதியாகாதே’ என்றமையால் 162, இறை. கள. 29 இன்உரை. திருக்கோடையார் செய். 290 இல் தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்பதைக் கண்டு மகிழலாம். ('வண்டலுற்றேம்') 163. பொருளியல்-13 (நச். உரை;.