பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#62 அகத்திணைக் கொள்கைகள் செவிவி இஃது எற்றினானாயிற்று? என வேலனை வினவின ளாக, அவன் கழங்கு பார்த்து இது தெய்வத்தினானாயிற்று:

என்று கூற, அஃதுணர்ந்த தோழி செவிலி கேட்கும் பொருட்டு அவள் கேட்கும் முறையில் கழங்கை முன்னிலைப் படுத்திக் கதி அறத்தொடு நிற்கின்றாள். பொய்படுபு அறியாக் கழங்கே! மெய்யே மணிவரைக் கட்சி மடமயில் ஆலும் நம் மலர்ந்த வள்ளியங் க்ானங் கிழவோன் ஆண்டகை விறல்வேள் அல்லன் இவள் பூண் தாங்கு இளமுலை அணங்கி யோனே." (பொய்படுபு-பொய்படுதல்; மணி-நீலமணி, கட்சி-காடு’ ஆலும்-ஆடும்; கானம்-காடு; வேள்-முருகன்; அணங்கி யோன்-வருத்தியவன்) இதில் தலைவியை வருத்தியவன் முருகன் அல்லன், வேறொருவன் எனத் தோழி கூறி அறத்தொடு நிற்றலைக் காண்க. குறுந்தொகைத் தோழி ஒருத்தி தலைவியின் களவொழுக்கத் தைப் புலப்படுத்தும் முறை இது. தலைவியின் உடல் வேறு பாட்டைக் கண்டு செவிலித்தாய் முதலியோர் நெற்குறி பார்ப்ப வளைக் கொண்டு அதன் காரணத்தை ஆராயத் தொடங்கு கின்றனர். குறத்தி பாட்டு பாடிக் கொண்டு குறி பார்க்கின்றாள். தோழி குறத்தியை நோக்கி, !அகவன் மகளே! அகவன் மகளே ס மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே! பாடுக பாட்டே: இன்னும் பாடுக பாட்டே, அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே." (அகவன் மகள்-கட்டுவிச்சி; அகவல்-அழைத்தல்; மனவு கோப்பு அன்ன-சங்கு மணியினாலாகிய கோவையைப் போன்ற வெண்மையாகிய) என்று கூறுகின்றாள். தான் சுறப் போகும் செய்தியை நன்கு கவனிக்க வேண்டும் என்பதற்காகத் தோழி அகவன் மகளை, மூன்று முறை விளிக்கின்றாள். பாடுதற்குரிய சிறப்புடைய மலை என்று குறிப்பிடுவதற்காகவே தோழி மீட்டும் பாடும்படி வேண்டு 165. ஐங்குறு-250 136. குறுந்: 23.