பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/183

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தோழியிற் கூட்ட மரபுகள் 165 அறத்தொடு நிற்கும் சந்தர்ப்பங்களையும் இலக்கண ஆசிரியர்கள் விதந்து கூறியுள்ளனர். இறையனார் களவியல் ஆசிரியர் இவற்றை, காப்பு கைமிக்குக் காமம் பெருகினும் நொதுமலர் வரையும் பருவம் ஆயினும் வரைவெதிர் கொள்ளாது தமரவண் மறுப்பினும் அவன் ஊறு அஞ்சும் காலம் ஆயினும் அந்நால் இடத்தும் மெய்ந்நாண் ஒரீஇ அறத்தொடு நிற்றல் தோழிக்கும் உரித்தே.”* - (காப்பு - இற்செறிப்பு: கைமிக்கு - அதிகமாகி; நொதுமலர். அயலார்; எதிர்கொள்ளாது - ஏற்றுக் கொள்ளாது; தமர் - உறவினர்; அவண் அங்கு ஊறு - துன்பம்; மெய்நாண் ஒரீஇ உடலின்கண் நின்ற நாண் நீக்கி; என்று தொகுத்துக் கூறுவர். தலைவியின் களவொழுக்கத்தைக் குறிப்பால் அறிந்த பெற்றோர்கள் அவளை இற்செறிக்கும் போதும், பிறர் தலைவியையை மணம் பேச வருங்காலத்திலும் தலைமகனுடைய பெற்றோர் பரிசத்தோடு தலைவியை வரை வதற்கு வருங்கால் தலைவியின் பெற்றோர் பரிசம் குறைவு என்று கூறியோ பிறவாறோ மணத்தை மறுத்த போதும், தலைவன் இரவுக் காலத்தில் தலைவியை நாடி வருங்கால் அவனுக்கு யானை பாம்பு புலி முதலியவற்றால் துன்பம் நேரிடும் என்று எண்ணித் தலைவி வருந்தும்போதும் தோழி அறத்தொடு - நிற்பாள். தோழி நிற்கவே, ஏனையோரும் நிற்பர். இச்சந்தர்ப் பங்களைத் தவிர வேறு சந்தர்ப்பங்களில் தோழி அறத்தொடு நிற்பதில்லை. இதனைத் தொல்காப்பியர், . . அறத்தொடு நிற்குங் காலத் தன்றி அறத்தியல் மரபிலள் தோழி என்ப. 黨。鸞靈 என்று கூறுவர். அகத்திணை இலக்கியத்தில் தோழியின் பங்கு மிகப் பெரியது. வரம்பற்ற உரிமைய்ையும் உடையவள் அவள் தலைவியின் உரிமையையும் செயலையும் தன்னுடையன வாகவே கொண்டு செயற்படும் உறவினை உடையவள். எனினும், தலைவியின் இசைவின்றி அறத்தொடு நிற்றல் மட்டும் தோழிக்கு இல்லை. இதனையே மேற்குறிப்பிட்ட தொல்காப்பிய நூற்பா ---ب۔یہ مم۔۔-- 11. இறை கள9 172. பொருளியல் 11 இளம்)