பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


៖ அகத்திணைக் கொள்கைகள் என்பதும் தாமே போதருகின்றன. மேலும் யான் நோகு என்ப தனால் செவிலியே இச்செய்தியை நற்றாய் முதலியோர்க்குணர்த்தி அவரை உடன்படுவித்து இவளை அவற்கீந்து இவள் வருத்தம் போக்குமாறு வேண்டலும் பெறப்படும். இனி ஒலி வெள்ளருவி ஓங்கு மலை நாடன் என்பதனால் தலைவன் பெரும் புகழும் பெருந்திருவும் உடையான், ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங் குடித் தோன்றல் என்று உணர்த்துகின்றாள். ஒலி வெள்ளருவி: என்றது மண்தேய்ந்த பெரும் புகழையும், ஒங்குமலை நாடன் என்றது, உயர்குடிப்பிறப்பையும் குறிப்பாக உணர்த்தின. இப் பாடலில் உண்மை செப்பல்', வேட்கையுரைத்தல்', ஏத்தல்: என்ற மூன்று வகை அறத்தொடு நிலையும் வருதல் காண்க. குறிஞ்சிப்பாட்டில் இந்த ஏழுவகைளில் ஆறு வகைகள் ஒருங்கே வரும் சிறப்பினை அப்பாடலைப் பயின்று அறியத்தக்கது. அறத்தொடு நிற்றலை அகப்பொருள் நூல்கள் பலப்பல வகை யாகக் கூறும். இவ்வாறு அறத்தொடு கூறும் உரைகளில் எல்லாம் இக்களவொழுக்க நிகழ்ச்சியினால் எவரும் எவரிடத்தும் குற்றம் காணா வகையாகத்தான் கூறப்பெறும் அறத்தொடு நிலைக் சுற்றுகள் தலைவியாலும் தோழியாலும் படைத்து மொழிவதான வெறும் பொய்மொழிகளாக இருக்கின்றமையின் அங்ங்ணம் அவர் பொப்புணர்த்துக் கூறுதல் அறத்தொடு பொருந்துமோ என வினவலாம். பாலதாணையால் நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை நிகழ்ந்தவாறே வெளிப்படையாகக் கூறப்புகின், நற்றாய் முதலிய உறவினர் உண்மையறியாமையான் கூறுவாரையும் வெகுள் வராதலாலும், இஃது எவர்க்கும் தீங்கு பயவாத நிலையில் இருப்பதனால் அதனை ஒளித்துரைத்தேனும் பாதுகாத்து நிற்பது நன்றேயாமாதலாலும் அவை உண்மையல்லாவிடினும் பொய்யுரைகள் ஆகமாட்டா. காரணம் இதனால் பழியும் பாவமும் ஒருவருக்கும் ஏற்படுவதில்லை. பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரை தீர்ந்த 32 ق حسج நன்மை பயக்கும் எனின். என்பது வள்ளுவம். அறத்தொடு நிற்றல் என்ற துண்துறைபற்றி 51 பாடல்கள் சங்க இலக்கியத்துக் காணப்பெறுகின்றன. இத்துறையின் கூறு பாடுகளையெல்லாம் நன்கு விளக்கும் முறையில் சில பாடல்கள் SAMMAAASAAAAASA SSASAS SSAS SSAS SSAS SSAS 177. குறள் - 292.