பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 அகத்திணைக் கொள்கைகள் முழுமதி புரைமுகமே முரிபுரு வில்லிணையே எழுதருமின் ணிடையே எனையிடர் செய்தவையே!” (பொழில் - சோலை: பழுது தீங்கு, பனைத்த - பருத்த: புரை ஒத்த முரிபுரு. வளைந்து நெளிகின்ற; எழுதுஅரு . எழுதுதற்கு இயலாத இடர் - துன்பம் ! 'சோலையிலுள்ள நல்ல மலரும், அம்மலர்களினுடைய புதுமணம் விரிந்த மனலிடமும், ஆங்குக் கண்ட என் அருமைத் தலைவியின் தீங்கில்லாத இன்சொல்லும், பருத்த இளைய அழகிய கொங்கை களும், முழுமதிக்கு நிகரான திருமுகமும், வளைந்து நெளிகின்ற வில் போன்ற இரண்டு புருவங்களும், எழுத இயலாத அரிய மின்னலையொத்த இடையுமே என்னை மயங்க வைத்து இவ்வாறு இடர் செய்தவையாகும்' என்கின்றான். எனவே, மலரே மணலே மொழியே முலையே முகமே இணையே இடையே எனை இடர் செய்தவையே என்று தலைவன் தன்னை இடர் செய்தவற்றை நீடு நினைந்து ஒருவழித்தணந்து ஓரிடத்திலிருக்கின்றான் என்று இப்பாட்டால் புலனாகும். - ஐங்குறுநூற்றுத் தலைவன் ஒருவன் ஒருவழித் தணந்து திரும்புகின்றான். அவனை நோக்கித் தோழி கூறுகின்றான்: யாங்குவல் லுநையோ ஓங்கல் வெற்ப இரும்பல் கூந்தல் திருந்திழை அரிவை திதலை மாமை தேயப் பசலை பாயப் பிரிவு தெய்யோ...' (யாங்கு எவ்வாறு; வல்லுநையோ - செய்ய வல்லவன் ஆயினையோ ஓங்கல் - உயர்ந்த இரும் - கரிய, பல் - பல வாகிய, அரிவை - பெண் திதலை - தேமல்; பாய மிக; தெய்ய, அசை) - 'தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றது திங்களில் தீதோன்றி யாங்குத் தம்மை மருட்டும் என்று கூறுவாள் யாங்கு வல்லுநையோ?” என்று வினவுகின்றாள். பண்டெல்லாம் தெளி வகப்பட இனியன இயம்பியும் தீராத் தேற்றம் செய்தும் அவளை அளிசெய்து போந்த அருட்கடலாகிய தலைவன்பால் இந்த வன்கட் செயல்தான் எவ்வாறு தோன்றியதோ என்று வியப்பாள் இவ்வாறு வினவுகின்றாள். ஓங்கல் வெற்ப என்றதனால் 182. சிலப் - கானல்வரி 14 183. ஐங்குறு - 231