பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் 173 நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து.' வெய்து உண்டல் வெம்மையுள்ளதாக உட்கொள்ளுதலை; வேபாக்கு-வேதல் (தொழிற் பெயர்). இங்கனம் இலக்கிய நயம் தோன்ற க் கூறும் பல குறள்மணிகளை வள்ளுவத்தில் கண்டு மகிழலாம். உடன் போக்கு நெறி தலைவனுக்கு அறநெறியாகாதென்று அறிஞர் ஒதுக்குவராதலால், அது பெரும்பாலும் தலைமகனுக்கு நிகழமாட்டாது. ஆகவேதான் அலர் வெளிப்பட்டுத் தோழி அறத்தொடு பட்டதன்” பின்னர்த் தலைவனுக்கு நிகழும் நிலைகளை, பட்ட பின்றை வரையாக் கிழவன் நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிதலும் பொருள்வயிற் பிரியா தொருவழித் தணத்தலும் புரைவ தென்ப கற்பா லான.' |பட்ட பின்றை அறத்தொடுநிலை நின்ற பின்னர்; நெட்டிடைபல காதமும்; புரைவது-பொருந்துவது). என்று கூறுவர் இறையனார் களவியலாசிரியர். இவர், இரவுக்குறி நிகழ்ச்சிக்குப் பின்னர்த் தலைவனுக்கு நிகழும் நிலையவாயிருக்கும் ஒருவழித் தணத்தல்', 'உடன்போக்கு வரைந்து கோடல் என்ற மூன்றனுள்ளும் உடன் போக்கு என்பதை ஒரு முதன்மையாக எடுத்துக் கூறாமல் ஒருவழித் தணத்தலும். வரைந்து கோடற்கேது வாகிய பொருள் வயிற் பிரிதலுமான ஏனை இரண்டினை மட்டிலுமே எடுத்துக் கூறுவாராயினர். இங்ங்ணமே, அதன் உரை யாசிரியரும், - வெளிப்பட்ட பின்றையும் உரிய ه هوrهة ة وج என்னும் நூற்பாவின் உரையில் உம்மையால் உடன் போக்கும் உரித்தாமாறு என்று அவ்வுடன்போக்கினை ஒரு முதன்மைப்பொரு ளாக எடாது உம்மையால் தழுவினமையும் ஈண்டு அறியப்பெறும், அங்ஙனமாயின், அகப்பொருள் நூல்கள் எல்லாம் ஒருவழித் தணத்தலைப்பற்றி மிகச் சிறுபான்மையாகவும் உடன் போக்கினைப் 190. டிெ-1128. 191. அடுத்த தலைப்பில் இதனைத் தெளிவாக்குவோம். 192. அறித்தொடு நின்ற பின்னர். 193. இறை. கள. 25, 194. இறை. கள்- 23