பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


174 அகத்திணைக் கொள்கைகள் பற்றி மட்டிலும் மிகப் பெரும்பான்மையாகவும் நுவலக் காரணம் என்ன என்று வினவலாம். உடன் போக்கு தலைவன் தலைவி யர்க்குக் கிளர்ச்சி தரும் செயலேயன்றி சுற்றுப் புறத்தாரும் பிறரும் அதுபற்றிப் பேசுவதற்குச் சுவையாகவும் இருக்குமாதலின் ஒரு வழித் தணத்தலைப் பற்றிய துறைகளும் துறைச் செய்திகளும் மிகக் குறைவாகவும், உடன்போக்குபற்றிய துறைகளும் துறைச் செய்திகளும் மிகப் பெரும்பான்மையாகவும் அமைவனவ்ாயின. இங்ஙனம் நூல்களில் காணப்ப்ெறும் சிறுபான்மை பெரும்பான்மை கட்கேற்ப, எடுத்துக்கொண்ட பொருள்களின் நன்மை தீமைகளை யும் முதன்மைக் கடமைகளையும் தேர்ந்து துணிதலும் அறுதியிட லும்.எவ்வாற்றாலும் பொருந்தாது. எனவே, இரவுக்குறி நிகழ்ச் சிக்குப் பின்னர் அலரெழுந்தமையறிந்த தலைவன் ஆண்டும் வரைதல் தெளியானாயின், அவனுக்கு: ஒருவழித் தனத்தல்' நிகழ்வதே அற நெறியாகும் என்பதோடன்றி உடன்போக்கு நிகழ்தல் ஆகாதென்பது தெற்றெனப் பெறப்படும். இதன் இன்றியமைய மை: இனி, இவ்வாறு முடிக்கப்பட்ட முடிவுக்குச் சான்றாய் நின்று அரண் செய்வதான வேறு காரணமும் இறையனார் அகப் பொருளுரையில் கூறப் பெறு கின்றது. அது, இங்ஙனமே இவள் (தலைவன் உடன்பட்டது போலவே உடன் போக்குக்கு உடன் படும். உணர்ந்து வைத்துத் (தோழி) தாயுழைச் செல்லும். தாயும் மகளது வேறுபாடு கண்டு உற்ற தறியாது நற்றிறம் படர்ந்து’’’ செல்லுகின்ற காலமன்றே, ஆத லாற் கண்டவாறே, அன்னாய், என்மகட்கு இவ் வேறுபாடு எற்றி னான் ஆயிற்று? எனக்குச் சொல்லாய்” என்னும்...அதற்குத்(தோழி) அறத்தொடு நிற்கும். நிற்க, செவிலித்தாய் இன்புற்ற மனத் தளாய், என் மகள் பெரிது அறிவுடையளே காண் என்று, அவ்வாறு நற்றாய்க்கு அறத்தொடு நிற்கும். தற்றாயும் இன்புற்ற மனத்தளாய்த் தந்தைக்கும் தனையன்மார்க்கும் அறத்தொடு நிற்கும், நிற்க, அவரும் அவளது அறிவும் ஆசாரமும் கேட்டு இன்புற்ற மனத்தராய்ச் சொன்மறுத்துத் தலையிறைஞ்சி நிற்பர். இங்ஙனம் சென்று மாட்சிமைப்பட்டுக் காட்டுமேயெனின், பெரிதும். மாட்சிமைப்பட்டுக் காட்டிற்று. காட்ட இவள் நீரில் ஆற்றிடைப் போய் வருந்தும் குறையென்னை?' என்று தலைமகனைச் செல 194, நற்றிறம்-நன்மைக்குரிய வகைபில் படர்ந்து.தாவி,