பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தோழியிற் கூட்ட மரபுகள் - 175 வழுங்குவிக்கும். இது கேட்ட தலைமகன் செலவழுங்கும். அழுங்க, நாளை நீ வரைந்து புகுதும் என்று தவிர்த்துப் பெயர்ந்து தலை மகளுழை வந்து, நிழலும் நீரும் உடயவாய்க் கானம் தண்ணிய வானாற் சேறும் என்று உடன்போக்கு அழுங்குவித்த விடத்துத் தலைமகனும் அந்நாள் வரைவொடு விரைந்து புகுவானாம். இது வெளிப்பட்ட பின்றைக்கிளவியும் உரியவாயினவாறு. என்பது. அலரறிந்த தலைமகட்கு வேறுபாடு என்பது எவ்வாற்றானும் விளைந்தே தீரும், அதனை அவள் எவ்வளவுதான் உள்ளடக்கி வைத்திருந்தாளாயினும் அஃது எஞ்ஞான்றும் அவளைச் சூழ்ந்து கொண்டே இருக்கும் செவிலித்தாய் முதலியோர்க்கு எப்படியோ ஒருநாள் எவ்வாறேனும் புலப்பட்டே ஒழியும். ஒழியவே, அப்புலப் பாடுகாணும் செவிலித்தாயர் முதலியோர் கட்டாயம் அவள் பருவத் திற்கு ஐயுறாதிரார் அங்ஙனம் ஐயுற்றவர் அவள் காதல் தோழியை வினவாதும் இரார். தோழியும் அவர்களிடம் தன் தலைவிக்கு நிகழ்ந்த வேறுபாட்டுண்மையை எவ்வகையிலேனும் எடுத்துரைக் கவே செய்வாள். வாயில்வழி உண்மையை அறிந்த பெற்றோரும் தலைவியை அவளுடைய காதல் தலைவனுக்கு எவ்வாற்றானும் திருமணம் செய்விக்கவே முயல்வர். எனவே, தலைவன் உடன் போக்கினை மேற்கொள்வதற்குச் சிறிதும் இடமே இல்லை என்பது எட்டுனையும் ஐயமின்றித் துணியப்பெறுகின்றது. தலைவியின் பெற்றோர், மற்றோர், தலைவி, தோழி இவர்கள் நுண்ணுணர் வுடன் இல்லாதவிடத்து எங்கோ மிகச் சிறுபான்மையே உடன் போக்கு நிகழலாம். எனவே, அலருணர்ந்த தலைமகனுக்கு உடன் போக்கு இங்ஙனம் மேற்கொள்ளப் பெறாது கழிந்தொழியவே, இனி அவனால் கட்டாயமாய் மேற்கொள்ளற்பாலதாயுள்ளது ஒருவழித் தணத்தலே யாகும் அல்லவா? - இதன் மேன்மை : இனி இவ் ஒருவழித் தணத்தல் தலை வனுக்கு அறநெறியால் நின்று தன்மை பயப்பதையும் ஆராய்வோம். ஊரில் எழுந்த அலரறிந்தவுடனே அவ்வலர் அடங்குமாறு தலைவன் ஒருவழித் தணந்து நிற்கின்றான் என்பதொன்றே அஃது அறநெறியாகும் என்பதனை நன்கு விளக்க வைக்கும். தலைவியின் காதல் கூட்ட மேன்மையும் அருமையும் அதனை எளிதில் பெற மாட்டாது தனித்திருந்து வருந்தும் தலைமகன் ஒருவனுக்கே செவ்வையாப்ப் புலப்பட்டு விளங்கும். இன்னும் அலர் எழுந்த தென்று கேட்டுத் தன் தலைவியைக் குறியிடம் பெற்றுக் கூடப் 196, இறை கள. 23 (உரை)