பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#76 அகத்திணைக் கொள்கைகள் பெறாத தலைவனோ இனித் திருமணம் செய்து கொள்ளும் நிலையில் உள்ளான். எனவே, அவன் தனது திருமணத்தால் பெறப் போவதோர் இன்பத்தைச் சிறப்பாகப் பெற விரும்பு கின்றானாதலின் அதனைப் பெறுவதற்கு முன் தலைவியைக் கூடப்பெறானாய்ப் பிரிந்து வருந்தும் நிலையிலும் உள்ளான். இங்ஙனம் பிரிந்து வருந்தும் அவன் உள்ளமும் துன்பமாய் மாறி விடுகின்றது. அதன் பின்னர் அவன் அத்துன்பத்திற்கு மாறான இன்பம் என்பதில் ஒரு சிறிது தோன்றப்பெற்றாலும் அதனைப் பேரின்பமாக நுகர்ந்துணரும் சுவைத்த நிலை அவனிடம் உண்டா கின்றது. இதனை நன்குணர்ந்த வள்ளுவப் பெருந்தகையும், ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய், "' என்று எடுத்துரைத்தார். காதலுணர்ச்சியை நுகர்தற்கு இடை யூறாக விருக்கும் அலர் பிரிவு முதலிய வற்றால் அவ்வுணர்ச்சி மேன் மேலும் பெருக்கெடுக்கின்ற உண்மையை, நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல்.’’’ tதுதுப்புதல்-அவித்தல்) { என்று மற்றோர் உவமை வாயிலாகவும் விளக்கினார் அப்பெருந் தகை. இந்த இரண்டு குறள் மணிகளாலும் பிரிவு முதலியவை எவ்வளவுக் கெவ்வளவு மிகுதியாய் உண்டாகின்றதோ, அவ் வளவுக் கவ்வளவு காதலர்கட்கு அன்பும் வேட்கையும் முன்னிலை யினும் பெருகி உண்டாகும் என்பது நன்கு தெளிவாகின்றது. ஆகவே, திருமண இன்பம் சிறந்து தோன்ற வேண்டுமாயின், அத் திருமணத்திற்கு முன்னர்க் காதலர்கள்அலர் காரணமாக ஒருவழித் தணந்து நிற்றலும் முறையே யாகின்றது. இத்தகைய இடையீடு நேர்தல் இயல்பும் ஆகும் என்பதையும் நாம் உணர்தல் வேண்டும். இது தலைவி காரணமாக நிகழ்தல்: ஒரு வழித்தணந்து நிற்கும் நிலை தலைவியால் நிகழுமேயன்றி தலைவனால் நிகழ்வ தில்லை. ஆயினும் இறையனார் களவியல், களவினுள் தவிர்ச்சி கிழவோற்கு இல்லை' என்றுகூறுகின்றது.இதன் உண்மைக்கருத்துதான் யாது? தலைவன் 197 குறள்-1147. 198. குறள்-1148 199. இறை கள. 33