பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} SÒ அகத்திணைக் கொள்கைகள் ஆழி திருத்திச் சுழிக்கணக்கு ஒதிநை யாமல் ஐய வாழி திருத்தித் தரக்கிற்றி யோவுள்ளம் வள்ளலையே' (ஆழி-வட்டம், ஆழிதிருத்தல்-கூடல் இழைத்தல்; ஐய என்றது, கூடல் தெய்வத்தை தரக்கிற்றியோ-தர வல்லையோ) என்று வாதவூரடிகள் கூறுவர். உ ைர யா சி ரி ய ர் பேராசிரியரும், கூடலை இழைத்துச் சுழிக் கணக்கைச் சொல்வி யான் வருந்தாமல் என்று தெளியக் கூறுவர். சங்கப் புலவராகிய கபிலரும் தலைவனைப் பிரிந்த தலைவியர்க்கு இவ்வழக்கம் உண்மையை, வீங்கிழை நெகிழ விம்மி ஈங்கே எறிக்கண் பேதுறல் ஆய்கோடு இட்டு சுவர்வாய் பற்றுநின் படர்சேண் நீங்க வருவேம் என்ற பருவம் உதுக்காண்' - (வீங்கு செறிந்த விம்மி-அழுது சங்கு-இவ்வாறு எறி. வெளிவிடும்; பேதுறல்-மயங்குதல்; ஆய்கோடு கூடல் இழைத்தல்; படர்-துன்பம் சேண்-நீண்டதுரம், உதுக் காண்-இதோ பார்) என்ற பாடலால் புலப்படுத்துவர். xi. உடன் போக்கு இரவுக்குறி நிகழ்ச்சிக்குப் பின்னர் ஊரில் அலர் வெளிப்பட்ட தென்று தலைவன் தோழியின்மூலம் அறிந்தவுடன் அவன் தலைவியை வரைந்து கோடலே முறை. அது செய்யானாகில் அவனுக்கு ஒரு வழித் தணத்தலாவது உடன் போக்காவது நிகழும் என்பதாக அகப்பொருள் நூல்கள் குறிப்பிடும். ஒருவழித் தணத் தலை முன்னர் விளக்கினோம். உடன் போக்கென்பதன்ை ஈண்டு விளக்குவோம். உடன் போக்கென்பது, தோழியின் இசைவு பெற்றுத் தலைமகளை அவர்தம் பெற்றோர் அறியாதவாறு தலைவன் தன்னுடன் அழைத்துக் கொண்டு, நடத்தற்கரிய AASAASAASAASAASAASAASAAAS