பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/203

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தோழியிற் கூட்ட மரபுகள் 185 ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉப் பிரிதல் அச்சம் உண்மை யானும் அம்பலும் அலரும் களவுவெளிப் படுக்குமென்று அஞ்ச வந்த ஆங்கிரு வகையினும் நோக்கொடு வந்த இடையூறு பொருளினும் போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும்.’’’ என்ற நூற்பாவால் இதனை அறியலாம். இடைவிடாது இன்பம் நுகர்தலோடு மனையறம் நிகழ்த்தும் உரிமையை உறுதியாக விரும்புதலானும், வினை செய்தலில் விருப்புடைய ஆண்மக்கள் பிரிவர் எனக் கருதி அஞ்சும் அச்சம் மகளிர்க்கு இயல்பாதலானும், களவொழுக்கத்தைப் புறத்தார்க்கு வெளிப்படுத்தும் என்று அஞ்சும்படி தோன்றிய அம்பலும் அலரும் ஆகிய இருவகைக் குறிப்பினாலும், தலைமகனது வரவினை எதிர் நோக்கி யிருந்த நிலையில் வந்த அவனுடன் அளவளாவுவதற்கு இயலாதபடி இடையூறு நேர்தலானும் உடன்போக்கும் (வரைவும்) தலைவி யிடம் தோன்றும் என்பது ஆசிரியரின் கருத்தாகும். இவ்வாறு ஒருவரும் அறியாவண்ணம் காதல் தலைவனுடன் தலைவி சென்ற செய்தி பிற்றை ஞான்று வெளிப்பட்டதும் தலைவியின் உறவினர் தலைவன் செயற்கு மிகவும் வெகுண்டு அவ் விருவர் செயலையும் தடுத்தற் பொருட்டுத் திரண்டு வரைந் தெழுவர். இங்ஙனம் இவர்கள் வெகுண்டு எழுவதற்கு முன்பே, தலைவி மறைந்த செய்தியைக் கேட்டதும் செவிவி மயங்கிக் கவலை மேற்கொண்டு தலைவன் தலைவி சென்ற இடைச் சுரத்தை நோக்கித் தேடிப் போவாள் வழியில் எதிர்ப்படும் முக்கோலந்தணரையும் மற்றவரையும் உசாவி அவரால் அவ்விரு வரும் அகமகிழ்ந்து சென்று கொண்டிருத்தலையும் அவர்கள் அற நெறியில் நிற்றலையும் அறிவாள். அங்ஙனம் செல்பவள், ஆற்றாமையால் மேற்செல்ல இயலாமல் மீண்டு வருவாள். தலைவியைப் பெற்ற நற்றாயோ செவிலியைப்போல் நெடுந்துTரம் செல்லாளாயினும், தன்னுார்த் தெருவரையிலும் தேடுவதற் குரியவள் என்று கூறுவர் தொல்காப்பியர். - ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும் தாமே செல்லுந் தாயரும் உளரே.'" 210 பொருளியல்-29 இளம்) 211 அகத்திணை-37 (நச்)