பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/208

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


} அகத்திணைக் கொள்கைகள் 瓣 அஞ்சவேண்டியவர் ஆகின்றனர் என்பதும், அன்னையர் என்றும் அன்புடையார் என்பதும் தெளிவாகும். படிகடவா இளநங்கை பிறந்தகத்தைத் துறந்து பெற்றோரை மறந்து முன்பின் அறிய ஆடவனைக் காதற் கொழுநன் என நம்பிக் கரடு முரடான வழியில் உடன் போகத் துணியும்போது இலக்கியம் புதினம் போலும் சாயலையும் விறுவிறுப்பையும் | பெறுகின்றது. கற்பவர்கட்கும் கிளர்ச்சியூட்டுகின்றது. காதலர் களின் உடன்போக்கும், மகள் போனபின் நற்றாய் இரங்கலும் புலவர்களின் கற்பனைப் பாய்ச்சலுக்கு வளமான துறைகளாக அமைகின்றன. இத்துறையொன்றில் புலங்கண்டவர் கயமன சர் என்ற புலவர். இவர் பாடிய இருபத்திரண்டு சங்கப்பாடல்களில் இருபது உடன் போகலும் தாயிரங்கலும் பற்றியவை. உடன் போக்கு என்னும் ஒரு துறையில் பதினேழு அன்னையரின் மன நிலைகளை அற்புதமாகப் படைத்துக் காட்டுகின்றார் இவர். இவை அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை என்ற மூன்று தொகை நூல்களிலும் உள்ளன. கயமனாருக்கு அடுத்து இத் துறையில் புலமை சான்றோர் ஒதலாந்தையார் என்பவர். இவர் ஐங்குறு நூற்றில் மகட் போக்கியவழித் தாயிரங்குபத்து 1374-3ல், உடன்போக்கின்கண் இடைச் சுரத்து உரைத்த த்து 381-39). மறு தரவுப்" பத்து.(391-400) என்ற தலைப்பு களிலும் பிற தலைப்புகளின் இடையிலும் யாத்த முப்பத்தைந்து பாடல்கள் இத்துறைபற்றியனவாகக் கணக்கிடலாம். காதலர் வழிச் செலவையும் வரவையும் தாயின் அவலத்தையும் வகுத்து வளர்த்து துணித்துப் பாடும் இவர் தம் கூரியதிறம் புதுமை :புன்...து. உடன்போக்கு பாலை நிலத்திலும் பிற நிலங்களிலும் நிகழ லாம்; கோடைக் காலத்திலும் இளவேனில் முதலான பிற காலங் களிலும் நிகழலாம். களவில் உடன் போக்கு பாலையாதல் யாங்வனம் தலைவனும் தலைவியும் உடன் செல்லலைக் குறிஞ்சி என்றன்றோ கூற வேண்டும்? அன்னோர் செல்லும் வழி நிழல், நீர், ஆ, இளவேனில் இவற்றின் நலமுடையது என்று புன்ையப் பெறுதலின் நிலத்தால் பாலை, காலத்தால் பாலை என்று கூறு வதற்கும் இடம் இல்லை. பெற்றோரைப் பிரிந்து செல்லுதலின் பாலை எனலாமோ எனின், புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஐடல் என்ற 2.ரிப்பொருள்கள் தலைவன் தலைவியர்க்கிடையே 20. மறுதரவு-மீட்சி.