பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


} அகத்திணைக் கொள்கைகள் தள்ளாப் பொருளியல்பின் தண்டமிழாய் வந்திலார் கொள்ளார்.இக் குன்று பயன்." (தள்ளா-குன்றாத, பொருள் இயல்பின்-பொருளி லக்கணத்தையுடைய, தண்தமிழ்-இனியதமிழ்.) என்றஅடிகளால்இதுமேலும் வலியுறுகின்றது. ஈண்டு குன்று பயன்’ என்றது குன்று தரும் பயன்; அதாவது களவுப் புணர்ச்சியின்பம்; குறிஞ்சி நிலத்து ஒழுக்கமாதலின், இவ்வாறு கூறப்பெற்றது. தமிழின் பொருளிலக்கணத்தைக் கல்லாத அறிவுக் குறை யுடையார் காதற் களவினைக் குறை கூறுவர் எனவும், தமிழை ஆய்ந்தவர் களவு நெறியை உடன்படுவர் எனவும் இப்பரி பாடல் தெளிவிக்கின்றது. இங்கு இவ்வாசிரியர் களவிற்புணர்ச்சியை உடைமையான்வள்ளி சிறந்தவாறும்,அத்தமிழை ஆய்ந்தமையான் முருகன் சிறந்தவாறும் உணர்த்துவர். பன்னிராண்டு வற்கடம் நீங்கிப் பாண்டிநாடு செழித்த பின்னர் பாண்டிய மன்னன் தமிழ்ப் புலவர்களைத் தேடிக் கொணரச் செய்தனன் என்றும், எழுத்தும் சொல்லும் அறிந் தவரே காணப்பட்டனராக, பொருளில் வல்ல புலவர் யாரும் காணப்பட்டிலர் என்றும், அதனால் பாண்டியன்மிகவும் கவன்றனன் என்றும் இறையனார் களவியலுரையில் ஒருவரலாற்றுக் குறிப்பு உளது. பின்னர் ஆலவாய் அவிர்சடை அண்ணலின் தண்ணருளால் அறுபது நூற்பாக்கள் அடங்கிய அகப்பொருள் நூலைப் பெற்றான் எனவும், இதுவே பொருளதிகாரம் என மகிழ்ந்து உரை வகுக்க ஏற்பாடு செய்தனன் எனவும் அறிகின்றோம். இவ்வரலாற்றால் பொருள் என்பது பண்டு அகத்திணையையே நினைக்கச் செய்த சிறப்பு நிலை புலனாவதையும் தெரிந்து கொள்ளுகின்றோம். சங்கத் தமிழ்ப் பாடல்களின் தொகை 2381 என்றும், அவற்றுள் அகத்தினை நுதலியவை 1862 என்றும் நாம் அறி வோம். இவற்றைப் பாடிய 473 சங்கச் சான்றோர்களுள் அகம் பாடியவர்கள் மட்டிலும் 378 பேர்களாவர். அகப்பாடல்களின் மிகுதியான எண்ணிக்கையும், அப்பாடல்களைப் பாடியவரின் மிகுதியான தொகையும் அகத்திணையின் சிறப்பையும் ஒருவாறு 4. பரிபா-9 அடி (25-26) 5. ஆகம்-400; நற்-400; குறுந்-401, ஐங்குறு-500 (129, 130 கிடைக்கவில்லை), கவித்-149; ப்ரிபர் 8 பத்துப்பா-4; ஆகமொத்தம் 1862காண்க.