பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முறைகள் 203 ளானாய்விடின் பாங்சற் கூட்டம் கூடித் தெருண்டு வரைதலும் உரியன; அங்குத் தெருளானாய் விடின், மதியுடன் படுத்து இரந்து பின்னின்ற நிலைமைக்கண் தோழி சேட்படுப்பத் தெருண்டு வரைதலும் உரியன அங்குத் தெருளானாய் விடின் தோழியிற் கூட்டம் கூடியாதல், செறிப்பறிவுறுக்கப்பட்டாதல், இரவுக் குறியது ஏதம் காட்டவாதல், வரைவு கடாவப் பட்டாதல் தெருண்டு வரைதலும் உரியன் ஈதெல்லாம் களவு வெளிப்படா முன்னுற வரைதல் விகற்பமெனக் கொள்க. இனி, வெளிப்பட்ட பின்றை வரைதல் விகற்பமின்று எனக் கொள்க. அவற்றுள் களவு வெளிப்படா முன்னுற வரைதல் சிறப்புடைத்து. இது தனக்காகாமையால் வரைந்தமையிற் சிறப்பின்று எனக் கொள்க. இது களவு வெளிப்பாடு அன்றென்று மறுத்து களவு வெளிப்படா முன்னுற வரைதல், அறத்தொடு நிலை நிகழாமுன் வரைதல் என்றவாறு. களவு வெளிப்பட்ட பின்றை வரைதல் என்பது, அறத்தொடு நிலை நிகழ்ந்த பின்றை வரைதல் என்றவாறு, களவு வெளிப்படா முன்னுற வரைதலும் களவு வெளிப்பட்ட பின்றை வரைதலும் ஆமாறு முன்னே சொல்லிப் போந்தாம்; அவ்வுரையையே இதற்கும் உரைத்துக் கொள்க’ என்பது" களவு வெளிபாவதற் குமுன் வாைதல் : களவு வெளியாவ தற்குமுன் வரையும் நிகழ்ச்சியில் தலைவன் தலைவியை மனம் பேசி அவள் சுற்றத்தாரை வேண்டுவான். அவர்கள் மிகுந்த பரியங் கேட்பர். அதை நிறைவேற்றுவதற்காகத் தலைவன் தலைவியை விட்டுப் பிரிவாள். இது விசை பொருட் பிரிவு என வழங்கப்பெறும். இங்வனம் பிரிந்து சென்றவன் வேண்டும் பொருளை ஈட்டிக் கொண்டு மீண்டு, தன் உறவினரை மேற் கொண்டு தலைவியின் இல்லம் அண்மி மனமுரசு ஒலித்துப் பெண் பேசுவிப்பான். சங்க இலக்கியங்களில் இதனைப் பல்வேறு விதமாக விளக்கும் பாடல்கள் உள்ளன. ஐங்குறுநூற்றுத் தலைவன் ஒருவன் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்தான். தலைவி அவன் பிரிவிற்கு வருந்தியிருந்தாள். தோழி வரைவதற்கு வேண்டுவன கொண்டு தலைவன் மீண்டும் வந்தமையைத் - தலைவிக்கு உணர்த்தி அவளை மகிழ்விக்கின்றாள். 2 இறை. கள. 24 இன் உரை'.