பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/230

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
212
அகத்திணைக் கோள்கைகள்
 

“நினக்கு யான் கொடுப்பக் கொள்',' 'யான்தர இவரைத் கொள்' என்ற மரபு நெறியை மேற்கொள்ளா ரன்றோ? சங்கப் பாடல்களை நுணுகி ஆராயின் களவின்வழி வந்த பழைய காதலர்க்கும் களவின்வழி வாராத புதிய காதலர்க்கும் இன்ப நிலையிலும் அன்பு நிலையிலும் அறநிலையிலும் யாதொரு வேறுபாடும் இல்லை என்பதை அறியலாம். இந்தக்களவு நெறியும் கற்புநெறியும் காப்பியங்களில் அமைத்துப் போற்றப் பெற்றதையும் உன்னினால் இரண்டின் செல்வாக்கையும் ஒருவாறு தெளியலாம். மரபு நெறிப்படி காவியம் அமைத்த இளங்கோ அடிகள் களவுக் காட்சியைச் சுட்டவில்லை. திருத்தக்க தேவர் சீவகனின் பல மணத்தைப் புனையும் போதெல்லாம் களவினையும் காட்சி ஐயம் முதலான துறைகளையும் வைத்துப் பாடியதைக் காண்கின்றோம். தேவர்வழி வந்த கம்பரும் மிதிலைக் காட்சிப் படலத்தில் இராமனும் சீதையும் உள்ளம் ஒன்றிய களவுப் புணர்ச்சியைக் சுவையுற அமைத்துக் காட்டுவதைப் பார்க்கின்றோம். சேக்கிழார் சுந்தரர்-பரவையார் திருமணத்தைக் களவு நெறியாகவும், காரைக்கால் அம்மையாரின் திருமணத்தை மரபு நெறியாகவும் அமைத்துப் பாடி இரு நெறிகளையும் சிறப்புறச் செய்தார் என்பதனையும் அறிகின்றோம். இக்காப்பியக் குறிப்புகளும் இந்த இருவகை மண நெறிகளும் தொன்று தொட்டு வருபவை என் பதை வலியுறுத்துகின்றன. இரண்டு நெறிகளையும் எண்ணி ஆராய்ந்தால்தான் அகவிலக்கியத்தின் முழுவனப்பும் தட்டுப்படும்; தமிழ்ச்சமுதாய நாகரிகத்தின் முழுவடிவமும் தெளிவாகத் துலக்க م كان لبن) 20. புறம்-200. 21. புறம்-201.