பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2! 3 அகத்திணைக் கொள்கைகள் வத்தெ னைக்கரம் பற்றிய வைசல்வாய் இந்த இப்பிற விக்குஇரு மாதரை 母 சிந்தை யாலும் தொடேன்என்ற செவ்வரம் தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்.” என்று கம்பன் சிதையின் கூற்றாகக் காட்டுவது இக்குறிக்கோள் நெறியேயாகும். திருமணச் சடங்கில் பெண்ணுக்கு மட்டிலும் தாலி போன்ற அடையாளம் பொறிப்பதற்கு மேற்கூறிய நடைமுறை யொன்றே காரணமாக இருத்தல் வேண்டும். ஒருத்திதிருமணம் ஆகிஒருவனுக்கு மனைவி ஆனாள் என்பது அத்திருமணத்தைக் கண்டார்க்கும் கேட்டார்க்கும் மட்டிலுமே தெரிய வரும். பிறர் அதனை எப்படி அறிவது: அண்மையில் மணம் செய்து கொண்ட நங்கைக்கும் புற வேறுபாடு காட்டுதற்கு அமைந்த அடையாளமே மணக் குறியாகும். களவு நெறியைப் போற்றிய சமுதாயத்தில் இத்தகைய அடையாளம் ஒன்று இன்றெனின் வேறு ஒர் இளைஞனுக்கு இவள் மீது காதல் ஒடலாம்; புறத் தோற்றமாக அடையாளம் இருக்கு மேல் அவனை அச் செயலினின்றும் தடுத்து நிறுத்துவதற்கு ஏதுவாகும். z பண்டைக் காலத்தில் மணமான பெண்ணுக்கும் மணமாகாத பெண்ணுக்கும் தோற்றத்தில் யாதொரு வேறுபாடும் இல்லை. இஃது ஒரு ஏமாற்ற நிலை. இந்நிலைதான் தொல்காப்பியர் குறிப்பிடும் பொய் ஆகும். புற வேறுபாடின்மை மயக்கம் செய்தலின் பொய்' எனப்பட்டது. இத்தகைய மயக்கத்தால் மண அடையாளம் இல்லா நங்கைமீது உள்ளம் போக்கும் இளைஞன் மேற்கொள்ளும் காதல் முயற்சிகளே வழு ஆகும், தொல்காப்பியர் குறிப்பிடும் “பொய்யும் வழுவும் இவையேயாகும்." தமிழ்ச் சமுதாயத்தில் இத்தகைய செயல்களை உற்று நோக்கி ஒர்ந்து ஆவன செய்யும் இனப் பெரியோர்களையே தொல் காப்பியர் ஐயர் எனக்கு குறிப்பிட்டார். இவர்களே கரணத்தை' வகுத்து மணம் எய்திய நங்கைக்கும் மணப் பருவம் எய்தி மணமாகா நங்கைக்கும் தோற்றத்தில் வேறுபாடு காட்டுவதற்கு என்றே புற அடையாளம் கண்டனர். பெண்ணின் கற்பு எவ்வகை 3. கம்ப. சுந்தர. சூளாமணி-34. 4. தமிழ்க்காதல்-பக் 149-151.