பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/233

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கரணம்பற்றிய குறிப்புகள் 215 யானும் ஊறுபடுதல் ஆகாது, ஊறுபடவும் விடக்கூடாது என்பது பண்டைப் பெரியோர்களின் நன்னோக்கமாகும். மண்டினி ஞாலத்து மழைவளந் தரூஉம் பெண்டி ராயின் பிறர்நெஞ்சு புகாஅர்" என்று சாத்தனார் கற்புக்குக் கடிய வரம்பு செய்ததும் ஈண்டு நீள நினையத் தகும். இத்தகைய குற்றத்தை அகத்திணைக் காதலர்கள் செய்யார் என்பது ஈண்டு தெளிவாக அறியத்தகும். பொதுவாக இத்தகைய குற்றம் தோன்றாதிருக்கும் பொருட்டே தாலி, தாலியுடன் மிஞ்சி (காலின் இரண்டாவது விரலில் மோதிரம் போல் மாட்டப்படுவது) என்ற மண அணிகள் தோன்றின. இவை வேண்டாத எண்ணங்கள் பிறரிடம் தோன்றாதிருக்கும்பொருட்டு ஏற்படுத்தப்பட்ட அறிவணிகளாகும். இவை பெண்ணின் அடிமைக் குறிகள் எனக் கருதுவது தவறு. பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தை நோக்கின், பெண்ணினத் திற்குக் கற்கும் உரிமை இருந்தது; கவிபாடும் உரிமையும் அவர் களிடம் திகழ்ந்தது. காதலுரிமையும், காதலனை இடித்துரைக்கும். உரிமையும், இல்லறத் தொழிலுரிமையும், பெருமையும் புகழும் எல்லாம் ஆடவருலகிற்கு நிகராகப் பெற்றிருந்தது என்பது அங்கை நெல்வியாகும். சமுதாயத்தின் நாகரிகம் அதன் மொழிச் சொற் களிலும் தெளியலாம். தலைவன் தலைவி, காதலன் காதலி, கிழவன் கிழத்தி என்னும் பால்நிகர் சொல் இணைகள் இதனை அரணாக நின்று எடுத்துக் காட்டுவனவாகும். ஒப்பினது வகை களைச் சுட்டும் தொல்காப்பியரும் இருபாலாருக்கும் ஏற்றத்தாழ் வின்றி பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டு' என்ற நூற்பாவில் துவன்றிருப்பதைக் காணலாம். இவை ஒத்திருந்தாலல்லது அறிவுடையாரிடம் காமக்குறிப்பு தக்கமுறையில் முகிழ்க்கா என்று உரை விளக்கமும் செய்து காட்டுவர். இன்ப நுகர்ச்சிக்கு ஏற்ற ஒப்பு வேண்டும் என்பது அவரது அறிவியல் கோட்பாடு, உடற் கூற்றினையும் உள. முதிர்ச்சியையும் நன்கு அறிந்த பேராசான் அவர். . செல்வார் அல்லரென் றியாணிகழ்ந் தனனே ஒள்வாள் அல்லளென்றவரிகழ்ந்தனரே ஆயிடை இருபேராண்மை செய்த பூசல்.’ மணிமேகலை-12 சிறைசெய். அடி (45-46) மெய்ப். 25. (இளம்) குறுந் 43 -