பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரணம்பற்றிய குறிப்புகள் 217 உரையாசிரியரும் ஈண்டுத் தலைவியை யாய் என்றது எதிர்ப் பட்ட ஞான்றே கற்புப் பூண்டொழுகுகின்ற சிறப்பை நோக்கி’ என்று கூறுவர். இது சிறந்த உரை. ஊழ் கூட்டி வைத்த காதலனை எதிர்ப்பட்ட அன்றே அவள் கற்புக்கடம் பூண்டாள் என்பது இவ்வுரையாசிரியரின் கருத்து. திருமணத்தால் கற் பொழுக்கம் உண்டாவதில்லை. கரணம் என்பது திருமண அடையாளமே, கன்னிமைகழிந்து ஒருவனுக்கு மனைவியானாள் என்பதைக் காட்டும் மனையணி’ என்பதாகும் அது’’ என்ற டாக்டர் மாணிக்கனார் கொண்ட கருத்து ஒப்புக்கொள்ள வேண்டிய கருத்தாகும்.'" சங்க இலக்கியங்களை நுனித்து நோக்கின் பண்டு நிலவிய கரணக்குறிகளை உய்த்துணர முடியும்.' டோம். சிலவற்றைக் காண் சிலம்புக்கழி தோன்பு : சங்க காலத்தில் பெண் குழந்தைக்குக் காலிற் சிலம்பு அணியும் வழக்கம் இருந்தது. அகநானூற்றுத் தலைவியொருத்தி தமர் அறியாமல் தலைவனோடு உடன்போய் விட்டதாகக் வருந்திக் கூறும் தாய்க்கூற்றில் இதனைக் காணலாம். “என் மகள் சிறு பருவத்தினளாக இருக்கும்பொழுது என் பெரிய இல்லத்தின்கண் காற்சிலம்பு ஒலிப்பச் சிறு தோழியருடன் பந்து விளையாடுவாள். சிறிது ஆடினும் கால் நோவுமே, நாவறண்டு போகுமே என்று எண்ணி அவளை அழைத்து கிண்ணம் நிறைந்த பாலைப் பருகுமாறு செய்வேன். எனக்காக ஒருவாய் பருகினாய், உன் தந்தைக்காகவும் ஒருவாய் பருகுவாய் என்று சொல்லில் மயக்கிப் பிறந்தநாள் தொட்டுப் பாலூட்டி வளர்த்தேன்' என்று குழவிப் பருவத்துக் காட்டிய அன்பினைத் தாய் எண்ணிப் பார்க் கின்றாள். - - 'சீர்கெழு வியனகர்ச் சிலம்புநக இயலி ஒரை யாயமொடு பந்துசிறி தெறியினும் வாரா யோவென் றேத்திப் பேரிலைப் பகன்றை வான்மலர் பணிநிறைந் ததுபோல் 10. தமிழ்க்காதல் - பக். 154 11. தொல்காப்பியர் கரணம் வேண்டும் எனக் கூறினாரே யன்றி, கரணக்குறி இதுவெனக் குறிப்பிடவில்லை. காலத்திற்கேற்பப் புதியபுதிய கரணக்குறிகள் கொள்ளட் டும் எனவிட்டுவைத்தார் போலும்! தங்காலத்துக்கரணக் குறியைக் கூறின் இதுதான் குறியெனக் கொண்டு மக்கள் அடிமைப்படாதிருக்க எண்ணினார் போலும்!