பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 அகத்திணைக் கொள்கைகள் பால்பெய் வள்ளம் சால்கை பற்றி என்பா டுண்டனை யாயின் ஒருகால் நுந்தை பாடும் உண்ணென்றுாட்டிப் பிறந்ததற் கொண்டும் சிறந்தவை செய்துயான் நலம்புனைந்தெடுத்தவென் பொலந்தொடிக் குறுமகள்' " (சிர் - சிறப்பு: வியநகர் - அகன்ற இல்லம், இயலி - முரலும் படி பகன்றை - ஒருவகைக் கொடி வான்மலர் - வெள்ளிய மலர், வள்ளம் - கிண்ணம்; பாடு - பகுதி, கூறு; பொலந் தொடி - பொன் வளையல்) என்ற பாடற்பகுதியால் இது பெறப்படும். இதனால் பாலுண் பருவத்துச் சிலம்பு இடும் வழக்கம் இருந்தது என்பதை அறியலாம்: இன்னொரு அகப்பாட்டாலும் இச்செய்தி அறியப்படும். இரவுக்குறியில் காதலர்கள் சந்திக்கின்றனர். தலைவனது புணர்ச்சி வேட்கையைத் தணிக்கத் தலைவி மழை பெய்யும் நள்ளிரவில் இரவுக் களம் வருசின்றாள். தனது நடமாட்டத்தைத் தன் வீட்டார் தன் சிலம்பின் ஒலியால் அறிந்து விடலாகாதே என்று அதன் ஒலிப்பினைக் கட்டி ஒடுக்கி வந்து செல்கின்றாள். “அஞ்சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்' [து ஞ்சூர்யாமம் - ஊர்துஞ்சு யாமம்! என்று தலைவன் தலைவியின் அன்பையும் அறிவையும் வியக் கின்றான். இன்னொரு உடன் போக்கு நிகழ்ச்சியிலும் இச்செய்தி வரு கின்றது. தலைவனுடன் செல்ல விரும்பிய தலைவி படுக்கை யினின்றும் இரவில் எழுந்து போகும்பொழுது சிலம்பின் ஒலி கேட்டுத் தாய் அறிந்து கொள்ளுவாள் என்று தலைவி சிலம்பினைக் கழற்றிக் கையில் எடுத்துக் கொண்டு போகின்றாள். அரிபெய்து பொதிந்த தெரிசிலம்பு கழிஇ யாயறி வுறுதல் அஞ்சி வேயுயர் பிறங்கல் மலையிறந் தோளே." (அரி - பரல் தெரிசிலம்பு - ஆராய்ந்து எடுத்த சிலம்பு; கழிஇ - கழற்றி, வேய் - மூங்கில்; பிறங்கல் - பக்க மலை; இறந்தோள் - போய்விட்டாள்) 12. அகம் 219 13. டிெ - 198 14. டிெ - 311