பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரணம் பற்றிய குறிப்புகள் 221 பெறுதல் மரபாக இருந்தது. வதுவை மணம் நிகழும் முறை அகநானூறு விளக்குகின்றது.* சிலம்பு கழித்தல், உள்ளதை ஒழித்தல் என்னும் எதிர்மறை அடையாளம் ஆகும். இயல்பாக வளரும் தலைமயிரை மழித்தல் துறவுக் கோலம் ஆதல் போல இருந்த சிலம்பினை நீக்குதலும் திருமணத்தின் அறிகுறியாயிற்று மலரணியும் ம பு: மங்கை நல்லாள் ஒரு மணவாட்டி என்று அறிவிப்பதற்குப் பல அடையாளங்கள் ஒவ்வொரு திணைக் கேற்பவும் இருந்திருத்தல் கூடும்; அவை இலக்கியத்திலும் இருந் திருத்தலும் கூடும். சங்கப் பாடல்களை நுணுகிக் கற்பார்க்கு மற்றோர் அடையாளமும் வழங்கியமை தெரிய வரும். இஃது ஒர் உடன்பாடான அடையாளம்; பெரிதும் வழக்கில் பரவியிருந்த காரணம். அகநானூற்றுத் தலைவி யொருத்தி ஊரலருக்குக் கரணம் கூறுகின்றாள்: 'ஓரிளைஞன் எங்கிருந்தோ விரைகின்ற குதிரையினை யுடைய தனது தேரைச் செலுத்தி ஞெரேலென வந்து குவளைக் கண்ணியை என் பின்னிய கூந்தலில் நான் விரும் பாதிருக்கவும் வாளா சூட்டினான்; வளரும் எழுச்சியினையுடைய என் இள முலைகளையும் கூர்ந்து நோக்கிவிட்டுச் சென்று விட் டான். இச் செயலுக்கே ஊர் என்னை ஒரு வகையாக நோக்க லாயிற்று. புன்னைத் தாதின் நிறத்தையும் பசலை படர்ந்த என் மேனி நிறத்தையும் உற்று நோக்கிற்று' என்பதாக." கூந்தலில் பூவைக் கண்ட அளவிலேயே தன்மீது ஊர்ப் பார்வை மாறி விட்டதே என்று தலைவி நொந்து கொண்டாலும், ஒருவனோடு ஒருத்திக்கு உறவு உண்டு என்பதற்கு மலர் போதுமான அடை யாளம் என்று ஊரார் துணிவுற்று அலர் மொழிந்தனர் என்பதே இவண் நாம் அறிய வேண்டியதொன்று. தன் மகள் தலைவனுடன் கூடி உடன் போயினள் என்று செவிலி கூறியதைக் கேட்ட நற்றிணைத் தாயொருத்தி இவ்வாறு கூறுவாள்: - அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர் இன்னா இன்னுரை கேட்ட சின்னாள் அறியேன் போல உயிரேன் நறிய நாறுநின் கதுப்பென் றேனே.” 23. அகம்-86. 24. டிெ-180. 25. நற்-144.