பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரணம்பற்றிய முறைகள் 225


அடங்காச்சினங் கொண்டால் என்செய்வது எனக்கற்பனை செய்து கொண்டு கவல்கின்றாள் இந்த முல்லைக் குழலி. இவள் கவலை நமக்கு அறிவிப்பது யாது? குமரிக் கொண்டை பூ மணம் அறியாதது என்பது. பூவணியும் வழக்கம் திருமணம் தொடங்கி மேற்கொள்ளப் படுவது. குமரியர் மலரணிதல் ஆகாது என்று தமிழ்ச் சமுதாயம் கொண்ட முறைக்குக் காரணம் இருத்தல் வேண்டுமன்றோ?

. “ ”பொலிவுடையது, கண்ணுத் கினியது, நட்பாடத் துணை யாவது, கைக்கு அழகியது, மணம் பொதிந்தது, மனத்தைக் கிளறுவது, காதலுக்கு நாகரிகத் துாதாவது: அனைய பெருஞ் சிறப்பும் வாய்ந்த ஒரு சிறு பொரு பூ பூவனையர் பூப்பெய்திய குமரியர்."30 இக் கருத்தினைச் சங்கப் பாடல்களால் அறியலாம்,

கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை

நாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரைஇ

ஐதுதொடை மாண்ட கோதை போல

நறிய நல்லோள் மேனி

முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே.”31

  |கோடல்-காந்தள் மலர், எதிர் முகை-அரும்பி மலராத நிலையிலுள்ள; நாறு-மணம் கமழும்; விரைஇ-கலந்து: ஐது-அழகியதாக; முறி-தளிர்; முயங்கல்-தழுவுதல்)
வேங்கையும் காந்தளும் நாறி 
ஆம்பல் மலரினும் தான்தண் ணியளே' 

காதற்குமரி முல்லை, குவளை, வேங்கை, காந்தள், ஆம்பல் இவை போல்பவள் எனவும், ஐம்மை, நறுமை, இனிமை, தண்மை இவை வாய்ந்த மென்மையள் எனவும், பூவாகவும் பூவின் தன்மையளாகவும் போற்றப் படுகின்றாள். மணமாகா மகளிர் மலர்குடி மணம் பரப்பிப் பிறரைக் கவர வேண்டுவதில்லை; கவருதலும் கூடாது. அத்தகைய செய்புனைக்கோலம் கற்புநெறிக்கு ஒவ்வாது; காதல் நெறியையும் வளர்க்காது. எனவே, கன்னியர் பூவணிதலைத் தமிழ்ச் சமுதாயம் ஆதரிக்க வில்லை.


30. தமிழ்க் காதல்-பக் 163 31. குறுந்- 62 32. അു. 84 அ-15