பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/244

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அகத்திணைக் கொள்கைகள் 22 چند 6 பூவணியும் உரிமை: மங்கையர் மலரணியும் உரிமையைத் திருமண நாள் தொடங்கிப் பெறுகின்றனர். திருமணம் ஆனதற்கு அடையாளமாகப் பூவணியும் கரணம் செய்யப்பெறும் செய்தி பாகும். எரிமருள் வேங்கை இருந்த தோகை இழையணி மடந்தையில் தோன்றும் நாட இனிதுசெய் தனையால் துந்தை வாழியர் தன்மனை வதுவை அயரயிவள் பின்னிருங் கூந்தல் மலரணிந் தோயே..”* [எரி-நெருப்பு: தோகை-மயில்; இழை-பொன்னாலான அணி, மடந்தையில்-மடந்தை போல) இதில் 'செந்நிறவேங்கைமலர்மீது இருந்த மயில் நகையணிந்த மங்கை போலக் காட்சியளிக்கும் நாட்டவனே, நல்லது செய்தனை. தின் குடும்பம் வாழ்க. திருமணத்தைக் கொண்டாடும்படி இவள் கூந்தலில் மலர் சூட்டினாய்’ என்று தலைவன் தலைவியைத் திருமணம் புரிந்து கொண்டபொழுது மணச்சடங்கில் ஒன்றாகிய தலைவியின் கூந்தலிலே மலர் சூடுதலை நிகழ்த்தக் கண்ட தோழி எல்லையற்ற மகிழ்ச்சியுடையவளாய்த் தலைவனைப் பாராட்டி மனமார வாழ்த்துகின்றாள். இங்குக் கூந்தலைப் பின்னி மலரணிந் கான் என்று கூறாமல் பின்னிய கூந்தலில் மலரணிந்தான் என்று கதுவது சிந்திக்கத் தக்கது. பின்னியநிலை குமரிக் கோலம்; மல்ாணிகை கற்புக் கோலம். இச் சடங்கு நிகழுங்கால் தலைவனது கை தலைவியின் கூந்தலைத் தொடும். கூந்தலைத் தொட்டா னுக்குக் குமரி உரிமையாகின்றாள். இவள் ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே." குறுந்தொடி மகளிர் நாறிருங் கூந்தற் கிழவர்' என்ற இலக்கிய வழக்குகளால் கூந்தலுக்கு உரியவன் அவள் கொழுநனே என்ற மணவழக்கு அறியப்படும். அவன் குமரியின் கூந்தலில் மலர் வேய்ந்து மணம் கொள்வன் என்பது குறிப்பு. 33. ஐங்குறு-294 34. குறுந். 225 35. புறம்-113