பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/245

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கரணம்பற்றிய முறைகள் 33% பண்டு நடைபெற்ற திருமண முறைகளை ஒரே பாடலில் தொகுத்துக் கூறுவர் நல்லாவூர்க் கிழார் என்ற சங்கப்புலவர். புதல்வர் பயந்த திதலைய வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பினின் வழாஅ நற்பல உதவிப் பெற்றோர் பெட்கும் பிணையை ஆகென நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நன்மணங் கழிந்த பின்றை" (திதலை-தேமல்; வால் இழை-தூய அணிகள்: பெட்கும்விரும்பிப் பேணும்; ஈர்இதழ்-குளிர்ந்த இதழ்; கதுப்பு'கூந்தல்) - இதில் குழந்தைகள் பெற்ற இல்லற மாதர் ஒருங்கு கூடி, கற்பு வழாமல் அறம்பல செய்க, கொண்டானைப் பேணி ஒழுகுக, தக்க வாழ்க்கைத் துணை ஆகுக' என்று திருமணக் காலத்து மணப் பெண்ணை வாழ்த்துவர் எனவும், கூந்தல்மேல் பூவும் பிறவும் விளங்க நன்மண்ம் நிகழ்த்துவர்' எனவும் கூறுவதைக் காண்க. திருமணம் நடைபெற்றது முதல் மகளிர் பூவணிவர் என்பதற்கு இப்பாடலும் குறிப்பிற் சான்றாதல் அறியப்படும். \ - ஆனால், இம் முடிபுகளை நினைந்து களவுத்துறைப் பாடல் களைக் கற்கும்போது எதிர்ச் சான்றுகள்போல் சில தோன்றக் கூடும்; குமரிக் காலத்துப் பூச்சூடும் வழக்கம் உண்டு போலும், அது சமுதாய விலக்கன்று என்று காட்டுவது போலச் சில செய்யுட்கள் காணப்படும்." இவ்வாறு வரும் பகுதிகள் மேற்காட்டிய முடிவுக்கு மாறான சான்றுகள் எனக் கருதிவிடல் வேண்டா. துறைகளோடு பொருத்தி நேர்பட ஆராயின், இயற்கைப் புணர்ச்சியிலும் உடன் போக்கிலும் இன்பக் களிப்பிலும் இன்ப எதிர்பார்ப்பிலும் நீர் விளையாட்டிலும் இவை குமரியர் பூவணிந்த குறிப்புகளாகவே இருக்கும். . . . . 36 அகம்-86 37. அகம்-198; நற்.264, 245; குறுந்-300