பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற நெறி - 229


காதலர் மனக்குறை தீரக் கூடிக் கலந்து இன்புற்று வாழ்தல். மலிவு-மகிழ்ச்சி. இம்மலிவுக் காலத்தே தலைவனும் தலைவியும் களவுக் காலத்தே நிகழ்ந்தவற்றை ஒருவர் மற்றவரோடு கூறி இன்புறுவர். இப்பகுதியில் நிகழும் செய்திகளைத் தொல்காப்பியர் 'கரணத்தின் அமைந்து முடிந்த காலை'4 'அவனறிவாற்ற அறிவும்'5 என்ற கற்பியல் நூற்பாக்களில் தொகுத்துக் கூறியுள்ளார். இந்த நூற்பாக்கள் முறையே தலைவனுக்கும் தலைவிக்கும் கூற்றுகள் நிகழும் இடத்தைக் கூறுபவை. இவற்றில் காணும் செய்திகள் சில தொல்காப்பியர் காலத்து வழங்கிய இல்லற முறைகளை விளக்குகின்றன. அவற்றுள்

'ஒன்று :

கரணத்தின் அமைந்து முடிந்த காலை

நெஞ்சுதனை அவிழ்ந்த புணர்ச்சி.4"

என்பது. தமிழர் மணமுறையில் நிகழ்தற்குரிய கரணம் இது என்பது தம் கர்லத்தில் வாழ்ந்த எல்லோரும் நன்கு அறிந்த ஒன்றாதலின் அது குறித்து அவர்தம் நூலில் விரித்து ஒதிற்றிலர். எனினும், இதுபற்றி முன்னர் சற்று விரிவாக விளக்கப்பெற்றது. ஆயினும், தொன்று தொட்டுத் தமிழர்கள் கொண்டொழுகிய திருமணச் சடங்குகள் சிலவற்றை அகம்-86, 136 பாடல்களால் ஒருவாறு உணரலாம். இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் வேள்வியாசான் காட்டிய முறையே அங்கி சான்றாக நிகழும் சடங்கு முறை தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் காணப்பெற்றிலது. எனவே, ஆரியர் மேற்கொண்ட திருமண முறைக்கும் தமிழர் கொண்டொழுகிய திருமணச் சடங்கு முறைக்கும் பெரிதும் வேறுபாடுண்டு என்பது அறிதற்பாலது. இதனை, -

      ‘’ஓத்துடை அந்தணன் எரிவலஞ் செய்வான் போல்'7

என்ற கலித்தொகைச் சொற்றொடராலும் உறுதிப் படலாம். இதில் புரிநூல் அந்தணராகிய வேதியரது வேள்விச் சடங்கு உவமையாக எடுத்துரைக்கப்பெறுகின்றது. இதனை ஊன்றி நோக்கின் இங்ங்னம் எரி வலம் வருதல் ஓத்துடை அந்தணராலன்றி 4. கற்பியல்-5 5. ഒ്.-6 o டிெ-5 மருதக் கலி-அடி-5).