பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/252

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


234 அகத்திணைக் கொள்கைகள் இது. தன்னினrய மெய் - கருப்பம் இதனால் தொல்காப்பியர் காலத்தே தமிழர்கள் குழந்தை பிறந்ததும் சில சடங்குமுறைகளை மேற்கொண்டனர் என்பது பெறப்படுகின்றது. தலைவி கருப்ப முற்றால் சுற்றம் முதலியோர்க்கு விருந்திட்டு மகிழும் வழக்கம் இன்றுபோல் அன்றும் இருந்து வந்தது என்பதை ஆளுகிக்கலாம். ஆற்றல் சான்ற தாமே அன்றியும் நோற்றோர் மன்றநங் கேளிரவர் தகைமை வட்டிகைப் படுஉம் திட்டம் ஏய்ப்ப அரிமயிர் ஒழுகுநின் அவ்வயி றருளி மறைநவில் ஒழுக்கம் செய்தும் என்றனர்; துனிதீர் கிளவிநந் தவத்தினும் நனிவாய்த் தனவால் முனிவர்தம் சொல்லே இதில், நம் தலைவியேயன்றி சுற்றத்தாரும் நோற்று ஒரு கருப்பம் தங்கிய நினது வயிற்றைக் கண்டு உவந்தெனவும்: அதற்கேற்ற சடங்கு செய்து மென்றார் எனவும், முற்காலத்து நாம் கேட்ப நமக்குக் கூறிய முனிவர் சொல்லும் உண்மையாயிற்றெனவும்: கூறியவாறு காண்க. இது தோழி கூற்று. அழு : - புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதில் நெய்யணி மயக்கம் புரிந்தோர் நோக்கி ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும் செப்பெருஞ் சிறப்பொடு சேர்தல் (புனிறு - வாலாமை, ஈன்றணிமை: ஐயர் - முனிவர்; அமரர் - தேவர்) என்பது. சிறப்பெய்தி மகப்பேறு பெற்று ஈன்றணிமை சேர்ந்த காலத்தில் எண்ணெய் ஆடும் தலைவியை முகமன் கூறுதற்கு முனிவர்மாட்டும் தேவர்களின் புதல்வர்களைப் பாதுகாத்தற் பொருட்டும்செய்யும் பெரியசிறப்புகளைக்குறிக் கின்றது . இப்பகுதி. அப்பொழுது செய்யப்பெறும் சிறப்புகளாவன: பிறந்த புதல்வன் முகம் காண்டல், ஐம்படை பூட்டுதல், பெயரிடுதல் முதலியன. குழந்தை பிறந்தபின் தாய் எண்ணெய் நீராடல், பாட்டன் பாட்டியார் குழந்தைக்குப் பெயரிடல், இரவலர்க்குப் பரிசில் வழங்கல். குழந்தையைக் காக்க என்று இல்லுறை தெய்வ வழிபாடு செய்தல் முதலியன இக்காலத்திலிருப்பதைப் போலவே அன்றும்