பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/253

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இல்லற நெறி 235 இருந்தமை இதனால் அறியக் கிடக்கின்றது. இத்தகைய மலிவு பற்றிய பல செய்திகள் தொல்காப்பியத்தில் காணப்பெறுகின்றன. இாண்டாவது :புலவி, ஊடல், உணர்வு இவை மூன்றும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத பொருள் களாகும். இவற்றுள், 'புலவி அண்மைக் காலத்தது; ஊடல் அதனினும் மிக்கது' என்பர் இளம்பூரணர்." உணர்தல் என்பதனை 'ஊடலை அளவறிந்து நீங்குதல்' என்று குறிப்பர் பரிமேலழகர். ' கற்பில் இவையே சிறந்த பகுதியாகும்; உளவியல் நுட்பமும் செறிந்த பகுதியுமாகும். காதலர்களின் உள்ளக் கிடக் கையை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது இப்பகுதி. தலைவன் தலைவியர்க்கிடையே நிலவும் அன்பு எத்தகையது என்பதைக் காட்டவே நமது முன்னையோர் இப்பகுதியை அவ்வளவு மிகை படக்கூறியுள்ளனர் என்பது கருதத் தக்கது. துணியும் புலவியும் இல்லாயிற் காமம் கனியும் கருக்காயும் அற்று." என்று கூறுவர் வள்ளுவப் பெருந்தகை. துனி என்பது முதிர்ந்த கலாம். புலவி என்பது இளைய கலாம். புலவி - மன வேறுபாடு: அதாவது பொய்ச் சினம். இவை இரண்டும் நன்றாகப் பழுத்து அழுகிய பழத்திற்கும் இளங்காய்க்கும் (கருக்காய்) முறையே உவமைகளாயின. மேலும், அவர் காமத்துப்பாலில் தலைவன் வேறு மகளிரைக் கலந்தானாகக் கருதித்தலைவி ஊடியதாகக்கூறும் குறள்கள் யாவும், அவன்மாட்டு அச்செயல் நிகழ்ந்ததோ என்ற ஐயத்தால் தலைவி கருதிச் சொல்லியனவேயன்றி, பிறநூல்கள் போல், உண்மையில் நிகழ்ந்ததாகக் கொண்டு தலைவனை இழித்துக் கூறும் கருத்துடையன ஆகாமை உய்த்துணரத் தக்கது. வள்ளுவர் பெருமானும் இக்கருத்தினை, இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கு மாறு: - - என்று குறிப்பிட்டிருதலைக் காண்க. இங்ஙனமே அப்பெரியார் தாம் கூறப் புக்க காமப் பகுதியை எல்லா நாட்டவரும் ஏற்குமாறு தூய்மைப்படுத்திக் கூறியிருப்பதை எண்ணி மகிழ்க 14. கற்பியல் - 15 (உரை) 15. குறள் -1109 (உரை) 16. டிெ - 1306 17. டிெ - 1321