பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/254

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


236 அகத்திணைக் கொள்கைகள் இனி, தொல்காப்பியர் தலைவிமாட்டு நிகழும்.ஊடல் உணர்வு களைப்பற்றிக் கூறுவதைக் காண்போம். தலைவன் தலைவி யர்க்குள் புலவி முதலியன நிகழும் காலத்தில் அவ்விருவர்பாலும் வாயில்களாக நின்று பேசுவதற்குரியார் பன்னிருவர் என்பதை நாம் அறிவோம்.' இந்த வாயில்களோடு தலைவனது ற்றாமைதன்னையும் அவன் புதல்வனையும் சேர்த்துக் கூறலும் உண்டு,' " வாயில்கள் கூற்று நிகழ்த்துவதில் சில வரையறைகள் உள்ளன. பெரும்பாலும் வாயில்கள் தலைவன் தலைவியரிருவரும் மனமகிழச் சொல் நிகழத்துதலையே நோக்கமுடையவராயிருப்பர். எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும் புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப." என்பது தொல்காப்பியரின் விதி. இவர்கள் தலைவன்டால் குறைய வேண்டும் பொழுது அவனை நேராகச் சுட்டிக் கூறாது பிறரைக் கூறுவதுபோலக் கூறுவர். அதாவது படர்க்கையால் பேசுவது போலக் கூறுவர். அங்ஙனம் கூறுதல் முன்னிலைப் புறமொழி என வழங்கப்பெறும். உன்கடன் வழிமொழிந் திரக்குங்கால் முகனுந்தாம் கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல் பண்டுமிவ் வுலகத் தியற்கை.* - என்ற பாலைக் கலியடிகளில் தோழியின் கூற்று முன்னிலைப் புற மொழியாக அமைந்துள்ளதைக் காண்க. கடன் வாங்குவோர். இரத்து வாங்கும்பொழுது கொண்டிருக்கும் முகமும் அதனைத் திருப்பிக் கொடுக்குங்கால் கொள்ளும் முகமும் வேறுபடுவது உலகத்தியற்கை என்பது இதன் பொருள். 'முன்னர், வேட்கையை யுடைய நீ வேட்கைப் பருவத்தளாய தலைவியை இரந்து அவனது நலத்தினை நுகர்ந்து உன் வேட்கையைத் தீர்த்துக்கொண்டாய்; உன் வேட்கையைத் தணித்தவள் பின்னர் வேட்கைப் பருவத்த ளாயவிடத்து உன்னை இரக்கும்பொழுது நீ சிறிதும் இரங்கு வாயல்லை’ என்ற கருத்துடன் ேதாழியின் பேச்சு தலைமகனை நோக்கியவாறு காண்க இதுே இன்று சாடை பேசுதல் என்று

ತಿಚ್ಟ! 25 (உரை).

冷 - 37 (உரை 20. டிெ - 37 ( ) 21, கலி.22