பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லற நெறி . #39 ஆவள் ஊடல் திராதிருத்தலே இது. இச்சமயத்தில் தோழி தலைவனை நெருங்கிப் பிணக்கினைத் தீர்க்க முயல்வாள். அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்.’ (அலந்தாரை-துன்பம் உற்றாரை அல்லல்-துன்பம், புலந் தார்-பிணங்கி யிருப்பர்; புல்லா-கலவாது.) என்பது தலைவி குறிப்பினால் தோழி கூற்று வந்ததைக் காண்க. புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்துஞ் - சொலத்தகு கிளவி தோழிக் குரிய.' என்று தொல்காப்பியர் இதற்கு விதி செய்து காட்டுவர். சில சமயம் தலைவனிடம் தோழி பணி மொழியும் கூறுவள்: கடு மொழியும் கூறுவள். . * பரத்தை மறுத்தல் வேண்டியும் கிழவி மடத்தகு கிழமை உடைமை யானும் அன்பிலை கொடிய என்றலும் உரியள்." என்று விதியும் செய்வர் ஆசிரியர். மகிழ்செய்தே மொழித் தொய்யில்சூழ் இளமுலை முகிழ்செய் முள்கிய தொடர்பவள் உண்கண் அவிழ்பனி உறைப்பவும் நல்காது விடுவாய் இமிழ்திரைக் கொண்க கொடியை காண் நீ; |தேமொழி-இனிய மொழி: முகிழ்த்தல்-தோன்றுதல்: முள்குதல்-கூடுதல்: இமிழ்திரை-ஒலிக்கும் அலை) இலங்கே ரெல்வளை யேர்தழை தைஇ நலஞ்சேர் நல்கிய ெ தாடர்பவள் சாஅய்ப் புலந்தழப் புல்லாது விடுவாய் இலங்குநீர்ச் சேர்ப்ப கொடியை காண் நீ.' (ஏர்-அழகு, தைஇ-உடுத்து: சாய்-சாய்ந்து புலந்துவெறுத்து புல்லாது-பொருந்தாதி 32. குறள்-1303 33. கற்பியல்-16 34. ഞു.-17 35. கலி-125