பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/258

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4 அகத்திணைக் கோள்கைகள் இக் களித்தாழிசைகளில் தோழி தலைவனை நோக்கிக் கூறுவதைக் காண்க. தோழி அன்பிலை 'கொடியை என்று கடிந்து கூறி யதைக் கேட்ட தலைவன் சினங் கொண்டானோ என ஐயுற்ற தலைவி, தலைவனது குறிப்பை யறிவதற்கும் தான் கொண்ட துணி தலைவற்கு என்னாகுமோ என அஞ்சியும், நான் இறந்து பட்டாலும் சரி, அவரை அவ்வாறு கூறாதே’ என்று அயன்மை யுடைய மொழியால் கூறுவாள். அவன்குறிப் பறிதல் வேண்டியுங் கிளவி அகன்மலி யூடல் அகற்சிக் கண்ணும் வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே.”* |வேற்றுமைக் கிளவி-அயன்மையுடைய சொல்.) என்று ஆசிரியரும் இதற்கு விதி செய்வர். நன்னலந் தொலைய நலமிகச் சாஅய் இன்னுயிர் கழியிலும் உரைய லவர்நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ ேதாழி புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே." (சாஅய்-மெலியவும் உரையல்-சொல்லற்க அத்தன் தந்தை; அன்பிலங் கடை-அன்பு இல்லா விடத்து) என்ற குறுந்தொகைப் பாடலில் தலைவி அவரை அன்பிலை கொடியைஎன்னாதி. அன்பில்வழி நின் புலவி அவரைஎன் செய்யும்? அவர் நமக்கு இன்றியமையாத எமரல்லரோ?' என்று இருவகை யாலும் தோழிக்கு அயன்மை கூறியவாறு காண்க. தலைவியின் அப் பண்புரையைக் கேட்ட தலைவன், தலைவி ஊடல் தணிந்து கூட விரும்புகின்றாள் என்பதை உணர்ந்து ஊடல் தணிவான். ஒரோவழி அவ்விருவரும் தங்கள் ஊடல் நீங்காது பிணங்கியே நிற்பாராயின், அறிவர் என்போர் முன்வந்து அவ்விருவர் வாழ்க் கையினும் தமக்குள்ள வருத்தந் தோன்றக் கழறியுரைப்பர். இவ்வாறு இடித்துரைக்கும் அவராணையை அவ்விருவரும் ஒரு போதும் கடவார். . இடித்துவரை நிறுத்தலும் அவர தாகுங் கிழவனும் கிழத்தியும் அவர்வரை நிற்றலின்." என்று விதி கூறுவர் தொல்காப்பியர். 36. கற்பியல்-18 37, குறுந்-93 38. கற்பியல்.14