பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/261

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இல்லற நெறி 243 என்பது விதி. மிக்க சிற்றத்திலும் தலைவி தன்னைப் புகழ்ந்து கொள்ளுதல் முறையன்று. எனினும், அவனுடைய காமக்கிழத்திய ரிடத்துத் தான் நடந்தொழுகும் மரியாதைபற்றியும், தலைவனது பரத்தமை கருதாது தான் கூடியொழுகுதல்பற்றியும் தலைவி குறிப்பால் தன்னை வியந்து கொள்ளுதல் கூடும். தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்தல் எத்திறத் தானும் கிழத்திக் கில்லை முற்பட வகுத்த இரண்டலங் கடையே.' என்பது தொல்காப்பிய விதி. - தலைவன் பரத்தையிற் பிரிந்து கரந்தொழுகுதல் தன் ஊரின் கண்ணே யல்லது வேற்று நாட்டு ஊர்களில் ஆகாது என்று கூறும் இறையனார் களவியல். பரத்தையிற் பிரிவே நிலத்திரி பின்றே." என்பது விதி. தலைவன் பரத்தையருடனும் ஏனைய மனைவி யருடனும் தன்னுார்க்குப் புறம்பாயுள்ள செய்குன்றமும் வாவியும் விளையாட்டிடமும் போன்றவற்றிற்குச் சென்று இன்பதுகர்ச்சி எய்துவான். - யாறும் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப.' என்பது விதி. இதில் யாறும் குளனும் காவும் ஆடி என்பதற்கு நச்சினார்க்கினியர் 'காவிரியும் தண்பொருநையும் ஆன்பொரு நையும் வையையும் போலும் யாறுகளிலும், இருகாமத்திணையேரி போலும் குளங்களிலும், திருமருதந்துறைக்காவே போலும் காக் களிலும் விளையாடி’ என்று கூறுவர். காவிரிப்பூம்பட்டினத்தை யடுத்து இருகாமத்தினை யேர்கள் இருந்தமை பட்டினப்பாலை யாலும்,' சிலப்பதிகாரத்தாலும்" அறியலாம். மதுரையில் வையையை யடுத்துத் திருமருதந்துறை என்னும் உய்யானம் இருந் தமை கலித்தொகையாலும்" பரிபாடலாலும்" தெளிவாகும். ♔ു. 39. ప్లై இறை கற். 52 47. கற்பியல்-50 48. பட்டின. 39 49. சிலப். 9:59-62 - 50. கலி. 26. திருமருதமுன்றுறை. 51. பரிபாடல். 7 - வரி 83