பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/263

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இல்லற நெறி 245 வழக்கம் இருந்ததாகத் தெரிகின்றது. இதனை இறையனார் களவிலுரையாசிரியர் கூறுமாறு: "தலைமகன் பரத்தையிற் பிரிந்த காலத்துத் தலைமகட்குப் பூப்புத் தோன்றிற்று; தோன்றத் தலை மகன் உணரும். எங்ஙனம் உணருமோ எனின், வாயில்கள் உணர்த்த உணரும். என்னை வாயில்கள் உணர்த்துமாறு எனின், தலைமகன் வாயில்களும் தலைமகள் மாட்டு உளவாம்; தலைமகள் வாயில்களும் தலைமகன் மாட்டு உளவாம்; ஆகலான், அவர்கள் உணர்த்த உணரும் என்பது.' இங்ஙனமின்றி, தலைவிக்குப் பூப்பு நிகழ்ந்த நாளில் சேடி செய்கோலஞ் செய்து, செப்புப் பாலி கையும் செம்பூவும் நீரும் கொண்டு சென்று ാജ്ഞ് வலம் வந்து பூவும் நீரும் அவன் அடிமேற் பெய்து போகப் பூப்பு நிகழ்ந்த தென்று தலைமகன் உணரும் என்றும், இம்முறை மேலாயினாரிடங் களில் பூப்பு உணர்த்துமாறென்றும் அதே உரையில் கூறுவர். திருக்கோவையாரிலும் இச்செய்தி வருகின்றது'. நம்பியகப் பொருள் இதனை, செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி அவ்வணி யுழையர்கண் டழுங்கிக் கூறலும்."" என்று கூறும். இங்ஙனமே, பரத்தைப் பிரிவில் தலைவிக்குப் புதல்வன் பிறந்த செய்தியறிவித்தற்கு அவர் வெள்ளணி அணிந்து செல்வதும் பண்டைய வழக்கமாக இருந்தது." மேற்கூறியவாறு அறிவிக்கப்பெற்ற தலைவியின் பூப்புச் செய்தி கேட்டதும் தலைவன் காலம் தாழ்த்தாது சென்று, அது நிகழும் மூன்று நாளும் அவளை அணுகியிருக்க வேண்டும் என்றும் , நான்காம் நாள் முதல் பன்னிரண்டு நாள் வரை அவளை அவன் கூடியுறைய வேண்டும் என்றும் கூறுவர். இதனை, பூப்பின் பிறப்பா டீராறு நாளும் நீத்தகன் றுறையார் என்மனார் புலவர் பரத்தையற் பிரிந்த காலை பரன.** என்ற தொல்காப்பிய நூற்பாவினால் அறியலாம். இதில் பூப்பின் பிறப்பா டீராறு நாளும் என்பதற்குப் பூப்பு நிகழும் மூன்று 58. இறை, களவியல் -43இன் உரை. 59. திருக்கோவை 163 60. நம்பி. அகப். 205 61. ബ്രൂ. - 206. 62. கற்பியல் 46