பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முப்பொருள் பாகுபாடு Գ (மாயோன்-திருமால் சேயோன்-முருகன்: வேந்தன். இந்திரன்.) என்று விதியும் செய்து காட்டுவர். தமிழகத்தில் ஐந்தாவது நிலமாகிய பாலை இல்லாததால் அதைப்பற்றி ஆசிரியர் குறிப்பிடவில்லை என்பது ஈண்டு அறியத்தக்கது. நானிலத்தை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற முறையில் தொல் காப்பியர் குறித்தற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறும் காரணம் அமைதியுடையதாகக் கருதலாம். ஐந்திணை ஒழுக்கம் எல்லாம் இல்லறம்பற்றி நிகழ்வது. கணவன் சொற்படி நடந்து கற்பொடு பொருந்தி வீட்டிலிருந்து கொண்டு இல்லறமாகிய நல்லறத்தில் ஒழுகுவது மகளிரின் இயல்பாதலால் முல்லை முதலில் கூறப்பட்டது. முல்லை என்ற சொல்லுக்கே இருத்தல் என்பது பொருளாகவும் வந்து விட்டது. குெறித்திட நில் ஒழுக்கமாகிய புணர்தலின்றி இல்லறம் நிகழாதாதலின்) முல்லைக்குப்பின் குறிஞ்சியைக் கூறினர் ஆசிரியர். புணர்ச்சிக்குப் பின்னர் இயல்பாக நிகழ்வது ஊடலாதலின் அவ்வொழுக்கத்திற்குரிய மருதத் திணையை அடுத்து வைத்தார்.( மருதம் என்ற சொல்லே ஊடியும் கூடியும் போகம் நுகர்தலைக் குறிக்கும், மருதம் சான்ற மருதம் தண்பனை, என்ற சிறுபாணாற்றுப்படைக்கு (அடி 186) நச்சினார்க்கினியர் இப்பொருளையே வழங்கி யிருத்தல் ஈண்டு நினைக்கத்தக்கது. பரத்தையிற் பிரிவு போலப் பிரிவு ஒப்புமை நோக்கி நெய்தலை இறுதியில் வைத்துள்ளார். நெய்தற்பறை இரங்கற் பறையாதலின் நெய்தல் இரக்கத்தைக் குறித்தும். - ...،م........مستمه...ممسعسع،.......................».م مم................ بع இந்த முல்லை முதலிய பெயர்கள் அந்தந்த நிலப்பகுதி களில் காணப்பெறும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற மலர்களின் பெயர்களால் வழங்கப்படுவன என்றும், நாளடைவில் அவற்றில் வழங்கும் ஒழுக்கத்திற்கும் அப்பெயர்களே வழங்க லாயின என்றும் கருதுவர் இளம்பூரணர். ஆனால், நச்சினார்க் கினியர் முதலில் ஒழுக்கத்திற்கே அப்பெயர்கள் அமைந்தன என்று கூறுவர். இதனைப் பின்னர் விளக்குவோம். காலப் பாகுபாடு : முதற்பொருளின் மற்றொரு பகுதியாகிய காலத்தைப் பெரும் பொழுது என்றும், சிறுபொழுது என்றும் தமிழ்நூலார் பகுத்துப் பேசுவர். பெரும் பொழுது என்பது, 7. அகத்திணை-5 இன் உரை.