பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/270

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


* 爱 ל ள் . 变 252 அகத்திணைக் கொள்கைகள் 'அறன் - அன்பு, அருள், கண்ணோட்டம் முதலிய ಶ್ಲ! றங்கள்; கடிமனை - காவல் அமைந்த மாளிகை, மாடம் - மாடி; கங்குல் - இரவு! என்று பின்பணிப் பெரும்பொழுதும் கங்குற் சிறுபொழுதும் வந்துள்ளன. வங்கப்பெயர் பெற்றிருந்த ஆலங்குடி வங்கனார் பாடிய பாடல்களில் கடற்குறிப்பு இல்லை! சங்கப் புலவர்கள் பாலைத்திணையில் பாடல்கள் யாத்திருப்பின் வளஞ் செறிந்த இலக்கியக் கற்பனைப் புனைவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். அலைகடல் நடுவண் எழும் கடும்புயல், கடற் கொள்ளை, சுறா மீன் திமிங்கலம் இவற்றின் தாக்குதல்கள், பாறைமோதல், பாய்மரம் முறிதல், பாய்கிழிதல், கலங்கவிழ்தல், திசைமாறிப்போதல், உணவின்றி வாடுதல், குடிநீரின்றி அல்லலுறு தல் போன்ற இடையூறுகளையும் அவற்றைச் சிந்தித்துச் சிந்தித்துத் தலைவி படும் மனத்துயரங்களையும், கடல் நீந்தித் திரைக்கையால் கரை சேர்ப்பிக்கப் பெற்ற தலைவன் துய்க்கும் ஆராப் புணர்ச்சி களையும் துவலும் கற்பனை வளஞ் செறிந்த பாடல்கள் கிடைத் திருக்கும். சங்கப் புலவர்கள் கடற்பாலையை மறந்து பழந்தடத்தி லேயே சென்றுவிட்டனர். நிலப்பாலையின் பல்லூறுகளையே சுவை படப் புனைதலிலேயே அவர்தம் மனம் சென்றது; இயல்பாக ஒடியது: கவிதை வளமும் பெற்றது. நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிவொடு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே." என்ற நூற்பாவால் பாலைத்திணையின் பொழுதுகளாகக் கோடை யையும் நண்பாலையும் தொல்காப்பியர் வகுத்தார். அப் பொழுதுகள் நிலப் பாலைக்கு நன்கு பொருந்துகின்றன. இதன் காரணமாகச் சங்கச் சான்றோர்கள் தலைவன்தன் சுரவழிச் செலவையே வழிவழியாக மிகுத்துப் பாடினரோ எனக் கருத இடம் உண்டு. ஆயினும், நிலப்பாலைதான் பாலை எனவும், நிலப் பிரிவுதான் பிரிவு எனவும் தொல்காப்பியர் வரையறை செய்யவும் இல்லை. 6. அகத்திணை - 11