பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/272

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


254 அகத்தினைக் கொள்கைகள் நினைவூட்டுகின்றது. இங்ஙனம் அறிதோறும் அறயாமையைக் காட்ட வல்ல ஒப்பற்ற கல்விச் செல்வத்தைப் பெறச் செல்வோரைப் பரணர் என்ற சங்கப் புலவர், கைதொழு மரபில் கடவுள் சான்ற இசய்வினை மருங்குச் சென்றோர்" என்று குறிப்பிடுர்ெ. 'கடவுள் சான்ற செய்வினை' என்பது ஒதற் பிரிவினை உணர்த்துகின்றது. கல்விப் பயன் கடவுளைத் தொழுதலே ஆகலின் அக் கல்வி பயில்தல் கடவுள் சான்ற செய் வினை எனப்பட்டது. கல்விப் பயன் இதேயாதலை, கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் தற்றாள் தொழா ரெனின்." என்ற திருக்குறளாலும் அறி யப்படும். இன்று கூட மணவினை முடித்துக் கொண்ட மாணாக்கர்கள்-சிறப்பாக மருத்துவ தொழிற் கல்லூரிகளில்-பயின்று வருவதை நாம் காணலாம். அவர்கள் யாவரும் ஒதற் பிரிவினை மேற் கொண்டவர்களே யாவர். காவற் பிரிவு: காவற் பிரிவு என்பது, நாட்டைப் பாதுகாத்தற் பொருட்டுப் பிரியும் பிரிவு. இதனால் நாட்டில் எளியோர்களை நலிவோர் உளர் எனக் கருதுதல் வேண்டா. ஒரு நாட்டில் பல இடங்களில் தமக்குள்ள குறைகளை நேரில் வந்து சொல்லுவதற்கு இயலாத மூத்தோர், பெண்டிர், இருக்கை முடவர், கூனர், குருடர், பிணியுடையோர் முதலியவர்கள் இருத்தல் கூடும். அவர்களை தேரில் சந்தித்து அவர்கள் குறைகளைக் கேட்டு, அவற்றினை ஓராற்றான் நீக்குதற் பொருட்டுப் பிரிவது. காடுகளில் ஒன்றினை யொன்று நலியும் உயிர்ச் சாதிகளைக் கண்டு தீமை செய்வன வற்றை முறை செய்வதற்கும் கொடிகளில் சிக்குண்டு அல்லலுறும் விலங்குகளைத் துறை நீக்குதற்பொருட்டும், கோயில் சாலை பொதுவிடங்கள் இவற்றினை ஆராய்வதற்கும், நல்குரவால் வருந்தும் குடிகளைப் புரத்தற்பொருட்டும் செல்வதைக் காவற் பிரிவு என்று சொல்லுவர். தன்னால் பாதுகாக்கப்பெறும் உயிர்ச் சாதிகள், குடிகள் முதலியோருக்குத் தன் உருக்காட்டு வதற்கும், ஒற்று வந்துள்ள மாற்றரசர்கட்குத் தனது ஊக்கம் காட்டுவதற்கும் செல்வதாகவும் இப்பிரிவு கூறப்பெறும். 9. அகம்-125 10. குறள்-2