பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/275

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிரிவு va೫ಹಣೆ - 257 காகச் செல்லுகின்றனர். இவ்வாறு செல்லுங்கால் சிலர் தலைவியை விட்டுச் செல்லுகின்றனர்; சிலர் தம்முடன் கூட்டிச் செல்லுகின்றனா. தலைமகளை விட்டுச் செல்லும்போது நிகழ்ச்சிகளின்பால் ஊன்றி நிற்கும் தம் உணர்ச்சி தலைமகள் மாட்டு நிற்கும் தம் உணர்ச்சியை மறைக்கும். ஏனெனில், இரண்டு உணர்ச்சிகள் ஒருங்கே இருப்பது இயற்கைக்கு முரணானது. இதனால் தம் உணர்ச்சி முழுவதும் அரங்க நிகழ்ச்சிகளிலேயே ஈடுபட்டிருக்கும். அரங்க நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவோர் பொது மகளிராக இருப்பின் எத்தனையோ செல்வர்கள் மயங்கி அப்பொதுப் பெண்டிர்களுடன் உறவு கொள்வதையும் காண் கின்றோம். இப்பரத்தையிற் பிரிவுபற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ள சிலர் பண்டைத் தமிழர்களிடம் இப்பரத்தையிற் பிரிவே இருந்ததில்லை என்று கூறுகின்றனர். எது எவ்வாறாயினும் நாடக வழக்காகப் புலவர்களால் படைத்து மொழியப்பெறும் தலைவர் களிடம் இக்குறை இல்லாமல் இருந்திருக்கக் கூடும்; உலகில் நடமாடும் சாதாரண மக்களிடம் பரத்தைமாட்டுச் செல்லும் குனம்-பரத்தைமை-சிறிதும் இருந்ததில்லை என்று கூறுவது அவ்வளவு பொருத்தமாகத் தோன்றவில்லை. அவ்வாறு கூறுவோர் மனித இயல்பையும் உளவியற் பண்புகளையும் சரியாக அறியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பேராசிரியரும் திருக்கோவையார் உரையில் பாத்தையிற் பிரிவு: என்னும் தலைப்பில் தோற்றுவாயாக, 'பரத்தையிற் பிரிதல் என்பது தலைமகளை வரைந்தெய்திய பின்னர், வைகலும் பாலே நுகர்வான் இடையே புளிங்காடியையும் நுகர்ந்து அதன் இனிமை யறிந்தாற் போல, அவள் நுகர்ச்சியினிமை அறிதற்குப் புறப் பெண்டிர் மாட்டுப் பிரியா நிற்றல்; அல்லது உம், பண்ணும் பாடலும் முதலாயின.காட்டிப் புறப்பெண்டிர் தன்னைக் காதலித்தால் தான் எல்லார்க்குந் தலைவனாகவின் அவர்க்கும் இன்பஞ் செய்யப் பிரியா நிற்றல் என்றுமாம்; அல்லது உம், தலைமகளை ஊடல் அறிவித்தற்குப் பிரிதல் என்றுமாம். இவ்வா றொழிந்து தனக்கின்பம் வேண்டிப் பிரிவானாயின், கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள', (குறள்-1101) என்பதனால் இவளுக்குத் தலைமகள் என்னும் பெயரோடு மாறுபட்டுத் தனது பெருமையோடும் மாறுபடா நிற்கும் என்று கூறுவதைக் காண்க. இவ்விடத்தில் இறையனார் களவியலுரையாசிரியர் இப்பிரிவைப்பற்றிக் கூறும் 17-~/چے