பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 அகத்திணைக் கொள்கைகள் கருத்துகளும் இப்பேராசிரியர் கருத்துகளுடன் ஒப்பு நோக்கி உணர்தற் பாலவை. இவ்வாறு பேராசிரியரும் களவியலுரை யாசிரியரும் பிற உரையாசிரியர்களும் செய்யுள் வழக்கில் இப்பிரிவைக் குற்றமற்றதாகக் கொண்டாலும், உலக pఉథితు இவ்வொழுக்கம் நிகழ்ந்து வந்தமையின் வள்ளுவர் போன்ற அறநிலையில் நிற்கும் சான்றோர்கள் இதனைத் தம் நூல்களில் இழித்துக் கூறியுள்ளதைத் தமிழ் மக்கள் எண்ணி உணர்வார்களாக தமிழ் நெறி உயர்ந்த நெறி என்பதைத் தம் உள்ளத்தில் நிலை நிறுத்துவார்களாக, - சாதிவேறுபாடு : மேற்கண்டவாறு கூறப்பெறும் ஆறுவகைப் பிரிவுகட்கும் காலவரையறையும் இலக்கண நூல்களில் கூறப் பெற்றுள்ளது. கல்வியின் பொருட்டுப் பிரியும் பிரிவு மூன்றாண்டு கட்கு மேற்படக் கூடாதென்பது பண்டையோர் கொள்கை. வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது’** என்பது தொல்காப்பியம். ஏனைய பகை, துது, பொருள்பற்றிய பிரிவுகள் ஒராண்டுக்குள்ளாதல் வேண்டும் என்பதும் தொல் காப்பியரின் கருத்தாகும்.' வடநூலார் ஒதற் பிரிவுக்கு ஆறாண்டும், அறப்புறங் காவற்கு எட்டாண்டும் கூறுவர். இனி, வேட்டை மேற்சேறல், நாடு காணச் சேறல் முதலிய பிரிவுகளைப் பாலையொழுக்கமாகக் கொண்டு புலனெறி வழக்கம் செய்தல் கூடாது என்பது ஆன்றோர் கொள்கை. இங்ங்ணம் ஒவ்வொரு பிரிவுக்கும் கால வரையறை கூறியவர்கள் அப்பிரிவுக்குரியார் யாவர் என்பதனையும் குறிப்பிட்டுள்ளனர். தொல்.ாப்பியர் காலத்திலேயே நால்வகைச் சாதிகள் வகுக்கப் பெற்றிருந்தன. இதனை எண்ணியே உரையாசிரியர்கள் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியோர்க்கு இந்த இந்தப் பிரிவுகள் உரியவை என்று கூறிச் செல்லுகின்றனர். ஆனால், ஆசிரியர் தொல்காப்பியனார் இப்பிரிவு இவர்க்குரியது எனத் தெளிவாக நூற்பா செய்து காட்டவில்லை. எனவே, பிறப்பு காரணமாகத் தொல்காப்பியர் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற கொள்கையைக் கூறினார் இலர் என்பது சிந்திக்கற்பாலது. தமிழ்மறை அருளிய திருவள்ளுவரும், 11. இறை. கள. நூற்-40 இன் உரை. 12. கற்பியல், 47. தி இ T 13. டிெ-48, 49,