பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/279

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இயல்-19 ஐந்திணையில் பரத்தமை செவ்விய சில இனிய காமநிலைகளையே எடுத்துக்கூறும் பண்பிலக்கியமாம் ஐந்திணையில், பொருள் வரம்பும் தெளிந்த நல்லொழுங்கும் பெறுமாறு தமிழறிஞர்கள் படைத்த ஆக்க இலக்கியத்தில் தலைவனது பரத்தமை நுவலப்படுதல் சரியா? சரியன்று என்பதுதான் வெளிப்படையான விடை. இதுபற்றிச் சிறிது ஆராய்வோம். - (1) விறுவிறுப்பும் எழுச்சியும் இல்லாத இயல்பான காதலை நுவலும் அகப்பொருள் இலக்கியத்தில் பரத்தைக் காதலை ஒரு பொருளாகச் சேர்ப்பின் அகவிலக்கியம் நயமும் நாட்டமும் உடையதாகும் என்றவனப்பு கருதிச்சேர்த்திருக்க வேண்டும் என்று சிலர் கருதுவர். இது தவறு. அக இலக்கியம் ஒரு தொடர்பொருள் பற்றிய தன்று. ஆகவே, இதற்கு விறுவிறுப்புத் தேவை இல்லை. கற்போருக்குக் கிளர்ச்சியூட்டும் பாங்கில் அகத்திணையைப் பதப்படுத்த வேண்டும் என்று பண்டையோர் கருதியிருப்பின், பாங்கன் காதல், தோழிகாதல், காதல் மாற்றம் போன்ற பல்வேறு பகுதிகளை இணைத்து இல்லக் களத்தை எதிர்குதிராகப் பாடிச் சுவையூட்டியிருப்பர். அவர்கள் நோக்கம் அஃதன்று. - (2) தலைவன் எத்துணைக் கொடுமை செய்யினும் தலைவி கற்பினின்றும் சிறிதும் நிலை கலங்காப் பெற்றியுடையவள் - என்பதனைப் புலப்படுத்துவதற்காகவே புலவர்கள் பரத்தமையைப் புனைந்துரைத்தனர் என்பதாக இன்னும் சிலர் கருதுவர்." தலைவியின் கற்புடைமையைத்தெளிவாக நிலைநாட்டுவதற்காகத் தலைவனைப் பண்பற்றவனாகக் காட்டுதல், எவ்வாற்றானும் பொருந்தாது. தன் கணவன் ஒழுக்கக் குறைவை எந்தக் கற்புடைய 1. கலித்தொகைச் சொற்பொழிவுகள்-பக். 13,