பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10 அகத்திணைக் கொள்கைகள் ஒராண்டினை ஆறு பிரிவாகக் கூறிட்ட பகுதிகள். அவை: கார், கூதிர், முன்பணி, பின்பணி, இளவேனில், முதுவேனில் என்பவை. கார் என்பது, மழைபெய்யும் காலம்; அஃது ஆவணித் திங்களும் புரட்டாசித் திங்களும். கூதிர் என்பது, குளிர்காலம்; அஃது ஐப்பசித் திங்களும் கார்த்திகைத் திங்களும். முன்பனிக்காலம் என்பது, மார்கழித் திங்களும் தைத் திங்களும், பின்பனியாவது மாசித் திங்களும் பங்குனித் திங்களும். இளவேனில் என்பது, சித்திரையும் வைகாசியும் சேர்ந்த காலப்பகுதி. ஆனியும் ஆடியும் சேர்ந்த காலப்பகுதி முதுவேனிலாகும்." (சிறு பொழுது என்பது, ஒரு நாளினை ஆறு கூறிட்ட பகுதிகள்: இவற்றை வைகறை, விடியல், எற்பாடு, நண்பகல், மாலை, யாமம் என்று கு றிப்பிடுவர்) வைகறை என்பது இராப் பொழுதின் பிற்கூறு: விடியலாவது, பகற்பொழுதின் முற்கூறு: எற்பாடு என்பது, பகற்பொழுதின் பிற்கூறு; நண்பகலாவது, பகற் பொழுதின் நடுக் கூறு: யாமம் என்பது இராப் பொழுதின் நடுக் கூறு. ஒவ்வொரு பகுதியும் பப்பத்து நாழிகை கொண்டவை. ஆசிரியர் சிவஞான யோகிகள் வைகுறு விடியல் என்பது ஒருபொழுது எனவும், எற்பாடு” என்பது விடிந்த பின்னுள்ள காலைப் பொழுதைக் குறிக்கும் எனவும் கொண்டுள்ளார். இதுபற்றி அவர்கூறும் தடைவிடைகளை அவருடைய முதற் சூத்தி விருத்தி என்னும் நூலில் விரிவாகக் காணலாம். இவர்கள் யாவரும் சொற்களின் அடிப்படையில் வாதத்தைத் தொடங்கி மலைகின்றனர் என்றே கொள்ள வேண்டும். 8. ஆறு பருவங்களாக எண்ணுவது இந்திய நாட்டின் பொதுவான பருவநிலையே யன்றித் தமிழகப் பருவ நிலையன்று என்றும், இம்மாதப் பெயர்களும் வட மொழிப் பெயர்களாதலின், வடமொழி வழக்கினையே தொல்காப்பியர் பயன்படுத்தியுள்ளார் என்றும் கூறுவர் டாக்டர் ப. அருணாசலம். பார்க்க: தொல்காப்பியர்-பக் (59-60). இஃது ஆராயத்தக்கது. 9. எற்பாடு-எற்பாட்டைப் பிற்பகல் என்று உரைப்பர் நச்சினார்க்கினியர். எல்-சூரியன்; பாடு-படுதல்; சூரியன் படுகின்ற காலம். சிவஞானமுனிவர் எற்பாட்டை 'ஞாயிறு உதயமாகும் நாள் வெயிற்காலை எனக் கூறுவர். எற்பாடு-உண்டாதல் என்பது இவர் கூறும் பொருள். இவர்க்குச் சிறு பொழுது ஐந்தென்பதே கொள்கையாகும். -