பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 அகத்திணைக் கொள்கைகள் தலைவியும் விரும்பாள் அப்படி விரும்பியதாகப் பாடல்கள் இல்லை. இருவரும் நிறையாளர்களாக இருப்பதுவே இனிய பெரிய சிறந்த இல்லறமாகும். (3) ஊடல் மிகின் இன்பம் பெருகும் என்பதற்காகத் தலைவன் பரத்தையை நாடுவான் என்ற கருத்தும் சிலர் கொண்ட தாகும். மருதத்திணையின் உரிப்பொருளாகிய ஊடல் தலைவனது புறத்தொழுக்கம் காரணமாகத்தான் எழும் என்று கொள்ளும் கருத்தும் ஒப்புக்கொள்ளக் கூடியதன்று. நாகரிகமற்றது மருதத்திணை என்றே சான்றோர் கருதுவர். பரத்தையின்றே ஊடலைச் சிறப்பித்தார் வள்ளுவப் பெருந்தகை. புலவி, புலவி துணுக்கம், ஊடல் என்ற அதிகாரங்களில் வரும் குறள்களை ஊன்றி நோக்குக. பெண்ணுக்கு ஊடல் பிறப்பியல்பு. பருவம் ஏற ஏற ஊடும் இயல்பும் உடன் வளர்கின்றது. ஊடல் இது என்று பெண்ணுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. "தலைவியின் ஊடலுக்குக் காரணம் வேண்டும் என்பதற்காக இப்பரத்தையிற் பிரிவு அமைந்தது என்பது அத்துணைச் சிறந்த காரணமாகத் தோற்றவில்லை’ என்பர் டாக்டர் அய்யர் அவர்கள்.” (4) நாள்தோறும் பால் குடிப்பவன் அதன் இனிமையறியான் இடையே புளிங் காடியையும் ஒருகால் அருந்துவனாயின் பாலின் இன்சுவை அவனுக்கு விளங்கும். அதுபோல் கற்புடையாளின் தூய பேரின்பத்தைக் கண்டறிதற்காகத் தலைவன் வரைவின் மகளிரைச் சார்ந்து திரிவான் என்பது இறையனார் களவியலுரையாசிரியரின் கருத்து. இதனையும் இதனைத் தொடர்ந்து கூறும் செய்திகளும் ஒப்புக் கொள்ளத்தக்கதல்ல. அவை அறிஞர்க்கு அருவருப்பை விளைவிக்கின்றன. . . (5) 'பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில் பரத்தையொழுக்கம் ஒருவகைக் குடும்ப வொழுக்கம்போல் பரவிக் கிடந்தது: வரைவின் மகளிர்தம் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உக்ந்த சூழ்நிலை சமுதாயத்தில் நிலவியிருந்தது; இடையறா இன்பப் புணர்வுக் கென்று கணவன்மார்கள் வைப்பு எடுத்துக் கொள்ளும் பழக்கம் சமுதாய மரபுபோல் ஊறி நின்றது' என்பர் டாக்டர் வ. சுப. மாணிக்கனார். இந்தச் சூழ்நிலையை, செல்வர்கள் வாழும் 2. இறை. களவியல் - 40 இன் உரை திருக்கோவை பரத்தையிற் பிரிவு-அவதாரிகை. - x குறுந்தொகை நூலாராய்ச்சி. பக். 79 4. தமிழ் காதல்-பக். 280. -