பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/282

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


264 அகத்தினைக் கொள்கைகள் போற்றி மதித்தொழுகும் பரத்தையர் சிலரின் குடிநலம், கணவன் என்றும் தன் மனைவியை உள்ளத்துள் உயர்வாகப் போற்றிய சால்பு, தற்காத்துக் தற்கொண்டானைப் பேணி யொழுகும் தமிழ்ப் பெண்ணின் மரபுப் பொறுமை என்ற சமுதாய நிலைகள் ஐந் திணையில் பரத்தை இடம் பெற்றமைக்குக் காரணமாகலாம். உள்ளப் புணர்ச்சி என்னும் அகத்திணையின் தலையாய பண்பிற்கு வரம்புடைய பரத்தை என்றும் ஊறு செய்யாமலே திகழ்ந்தாள் என்பது எண்ணத்தக்கது. . <?» இழிவான பரத்தையரும் தமிழ்ச் சமுதாயத்தில் இருந் தமைக்கும் சான்றுகள் உள்ளன. அதனைச் சில இலக்கியங்கள் சுட்டிக் காட்டவும் செய்கின்றன. தாதுண்டு பூவைத் துறக்கும் வண்டுபோலப் பொருளை உறிஞ்சி ஆளைத் தோலாக விடும் அரிவையரும் உளர். அவர்களைக் காதலிகள்' என நம்பி இல்லறம் துறந்த நம்பியரும் உளர். இவர்கள் எஞ்ஞான்றும் ஐந்திணையில் இடம் பெறார். இல்லறத்தை நல்லறமாக, தலையறமாக, மதித்த கணவன்மார்களையும் அன்னவர்களின் குடும்ப வாழ்க்கைக்கு இடையூறாக இராது ஒழுகிக் கொள்ளும் பரத்தைமார்களுமே ஐந்திணையில் இடம் பெறுகின்றனர். இத்தகைய பரத்தையொருத்தி நற்றிணையில் இடம் பெறு கின்றாள். விழுமிதிற் கொண்ட கேண்மை நொவ்விதின் தவறுநன்கு அறியா யாயின் எம்போல் ஞெகிழ்தோட் கழுழ்ந்த கண்ணர் மலர்தீய்ந்து அனையர் நின்நயந்தோரே." (விழுமிது-சிறந்தது; கேண்மை-நட்பு: நொவ்விதின்-நுட்ப மாகி; நயந்தோர்-விரும்பப்படுவோர்; ஞெகிழ்தோள். நெகிழ்ந்த தோள்) மனைவியை நினையாத தலைவனைப் பரத்தை கழறியுரைக்கும் பாடலாகும் இது. ஊரறிய வாழ்க்கைப் படுத்திய மங்கை நல்லாளைக் கைவிடும நீ எம்போல்வாரைக் கைவிடாதிருப்பாய் கொல்? தவற்றினை நன்கு உணர்க. மலரைக் கருக விடற்க’ என்று இல்லறநெறிப் படுத்துகின்றாள் இப்பரத்தை. ஆகவே, ஐந்திணைப் பரத்தையைத் தொல்காப்பியரும் மனையோள் 6. நற்.315