பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/283

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஐந்திணையில் பரத்தமை 265 ஒத்தலின்' என நிகர்படக் கூறுவர். இப் பெண்டிர்களை பொருட் பெண்டிராக, விலைமாதர்களாகத் தொல்காப்பியமும் குறிப்பிடவில்லை. சிங்க நூல்களும் காட்டவில்லை. தொல் காப்பியர் இத்தகைய பரத்தையைக் காமக் கிழத்தி' என்று திரு நாமமும் சூட்டுவர். இதனால் இவர் உயர்வு பெறப்படும். பண்டைச் சமுதாயத்தில் கணிகை மடந்தையருக்கு ஒருவகைச் செல்வாக்கும் இருந்தது. பாணன் கூத்தன் விறலி பரத்தை யாணஞ் சான்ற அறிவர் கண்டோர்" என்ற தொல்காப்பிய நூற்பாப் பகுதியால் பரத்தை கற்பினில் கூற்றுக்கு உரியவளாக எண்ணப் பட்டிருப்பது ஈண்டு நினையல் தகும். எட்டு இடங்கள் அவள் சொல் நிகழ்தற்கு உரியவை யாகும்.' சங்க இலக்கியத்தில் கற்புத் திணையில் உள்ள பாக்கள் 966. இவற்றுள் பரத்தமை பற்றியவை 279. பாடியோர் தொகை 50. ஒரம் போடியார், மருதன் இளநாகனார், பரணர், ஆலங்குடி வங்கனார், ஒளவையார் நக்கீரர், மருதன் இளங்கடுங்கோ, மாங்குடி மருதனார் என்போர் பரத்தைத் துறை பாடுவதில் வல்லவர்கள். கற்புத் திணையில் சற்றேறக் குறைய மூன்றில் ஒரு பங்கு பரத்தைப் பாடல்களாக இருத்தலின் சங்க காலத்தில் இத் துறைப் பாடலுக்கு இருந்த நன்மதிப்பு ஒருவாறு அறியப்படும்.' பிறன்மனை நயத்தல்போல் பரத்தமை கடியப்பெற்றிருப்பின் வாயில் மறுத்தல், வாயில் நேர்தல் என்ற துறைகட்கே இடம் இருந்திருக்காது. முன்னது பரத்தமை தவறு என்பதையும் பின்னது தவற்றினைச் சுட்டித் தழுவிக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்துகின்றன. இதனால்தான் இல்லறம் சிதை யாமல், கற்பு மகளிரின் மனமும் திரியாமல், மக்கட்பேறும் குறை யாமல் இருந்து வந்தது. பொதுமைப் பெண்ணும் பெருமையை அடைகின்றாள். பரத்தமை தமிழ்ச் சமுதாயத்தின் இயல்பு வழக்காக இருந்தமையால் அகத்திணையில் பரத்தையிற் பிரிவு இடம் பெற்றது. . r மனைவியையன்றிப் பிற மாதரை நினையாத நிறையுடைக் கணவன் மார்களும் தமிழகத்தில் இருந்தனர். 7. கற்பியல்-10 8. ബ്-10 9. செய்யுளி-182 10. கற்பியல்-10 11. தமிழ்க் காதல்-பக். 29}