பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/285

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஐந்திணையில் பரத்தமை 267 என்பது அவர்காட்டும் பாடல். தலைவன் புறத்தொழுக்கம் இலனாயிருக்கவும் அவன் அவ்வாறு ஒழுகுகின்றான் என்று கருதித் தலைவி ஊடுகின்றாள். இங்குத் தலைவன் சினந் தானல்லன்: பாயற் பூசலும் செய்தானல்லன். இது அமளிக்கண் அரிவையரின் இயல்பு என்று மகிழ்ந்து புலவி நீக்கி மெய்யின்பம் நுகர்கின்றான். மேயச் சென்று வந்த எருமையின் கோட்டில் பகன்றைக் கொடியின் வெள்ளிய மலர்கள் செறிந்து கிடந்ததைக் கண்ட எருமைக் கன்று அவ்வெருமையைத் தாய் இல்லை என்று ஒருகால் மயங்கியதாம் என்று நகையாடினான். பாயற் பயனையும் கெடாமல் துய்த்தான்; இத்தலைவனே மருதத்திணைக்குரிய உண்மையான தலைவனாவான்.