பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முப்பொருள் பாகுபாடு ii இங்ஙனம் ஐந்தினைக்கும் பெரும் பொழுது சிறு பொழுதுகள் பகுக்கப்பட்டது. அவ்வந் நிலத்திற்கேற்ப இப்பொழுதுகள் தலைவன் தலைவியர் மாட்டுத் தோன்றும் காமக் குறிப்பைச் சிறப்பித்தல் பற்றியாகும் என்பது உணர்தற்பாலது. இதுபற்றி இளம்பூரணர் கூறுவது: "இவ்வறுவகைப் பருவமும் அறுவகைப் பொழுதும் இவ்வைந்திணைக்கு உரியவாறு என்னை எனின்: முல்லையாகிய நிலனும், வேனிற் காலத்து வெப்பம் உதிந்து மாறும் புதலும் கொடியும் கவினழிந்து கிடந்தன. புயல்கள் முழங்கக் கவின் பெறும் ஆதவின், அதற்கு அது சிறந்ததாம். மாலைப் பொழுது இந்நிலத்திற்கு இன்றியமையாத முல்லை மலரும் காலமாதலானும், அந்நிலத்துக் கருப் பொருளாகிய ஆனிரை வருங் காலமாதலானும், ஆண்டுத் தனியிருப்பார்க்கு இவை கண்டுழி வருத்தம் மிகுதலின், அதுவும் சிறந்ததாயிற்று. குறிஞ்சிக்குப் பெரும்பான்மையும் களவிற் புணர்ச்சி பொருளா தலின், அப்புணர்ச்சிக்குத் தனியிடம் வேண்டுமன்றே, அது கூதிர்க் காலத்துப் பகலும் இரவும் நுண்துளி சிதறி இயங்குவார் இலராம் ஆகலான், ஆண்டுத் தனிப்படல் எளிதாகலின், அதற்கு அது சிறந்தது. நடுநாள் யாமமும் அவ்வாறாகலின் அதுவும் சிறந்தது. மருதத்திற்கு நிலன் பழனஞ் சார்ந்த இடமாதலான் ஆண்டு உறைவார் மேன்மக்களாதலின், அவர் பரத்தையிற் பிரிவுதி அம் மனையகத்து உறைந்தமை பிறர் அறியாமல் மறைத்தல் வேண்டி, வைகறைக்கண் தம் மனையகத்துப் பெயரும் வழி. ஆண்டு மனைவி ஊடலுற்றுச் சார்கிலளாமாதலால், அவை (வைகறையும் விடியலும்) அந்நிலத்திற்குச் சிறந்தன. நெய்தற்குப் பெரும்பான்மையும் இரக்கம் பொருளாதலின், தனிமையுற்று இரங்குவார்க்குப் பகற்பொழுதினும் இராப் பொழுது மிகு மாதலின், அப்பொழுது வருதற்கேதுவாகிய எற்பாடு கண்டார் இனிவருவது மாலையென வருத்தமுறுதலின், அதற்கு அது சிறந்ததென்க. பாலைப் பொருளாவது, பிரிவு: அப்பிரிவின்கண் தலைமகற்கு வருத்தமுறுமென்று தலைமகள் கவ்லுங்கால் நிழலும் நீரும் இல்லாத வழி ஏகினார் எனவும் கவலுமாதலின், அதற்கு அது சிறந்தது என்க.'" இவ்வாறே நச்சினார்க்கினியரும் ஏற்புடைய காரணங் கூறிச் செல்லலை அப்பொழுதுகளின் உரிமை கூறும் நூற்பா உரைகளால் அறிந்து கொள்ளலாம். - 10. அகத்தினை 12-இன் இளம்பூரணர் உரை.